Kamalhassan on Manobala : 'அவரு இருக்க இடத்துக்கே கமல் வரமாட்டார்... அழுத மனோபாலா..' சுஹாசினி கொடுத்த ஷாக்
உன்னோட சித்தப்பா இந்த உலகத்துக்கிட்டேயே பேசுறாரு ஆனா என்னோட மட்டும் பேசமாட்டார் என சுஹாசினியிடம் மனம் வருந்தி அழுதுள்ளார் மனோபாலா
இயக்குநர் மற்றும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியும், 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மனோபாலா.
இயக்குநர் - நடிகர் :
மனோபாலா இயக்கிய முதல் படமே ராதிகா நடித்த 'பிள்ளை நிலா'. இன்றும் இப்படம் பாடலின் விருப்பமான படமாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் இயக்கிய ஊர்காவலன், என் புருஷன் எனக்கு மட்டும், சிறைப்பறவை என ஒரு இயக்குநராக தனது ஆளுமையை ஆழமாக நிரூபித்தவர். எந்த அளவிற்கு அவர் இயக்குநராக சிறப்பான பணியை செய்தாரோ அதே போல தனது தோற்றத்திற்கு ஏற்றார் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பலரின் கேலி பேச்சுக்குகளுக்கு மத்தியில் அவரது பென்சில் போன்ற தோற்றத்தை பிளஸ்ஸாக மாற்றி வெற்றி கண்டவர் மனோ தைரியம் கொண்டவர் மனோபாலா.
மனோபாலாவின் சினிமா பிரவேசம் :
மனோபாலா முதன் முதலில் சினிமா துறையில் அடியெடுத்து வைத்து இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக. அதுவும் அவரை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தியது நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் - மனோபாலா இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. ஆனால் உண்மையில் மனோபாலாவின் நெருங்கிய நண்பர்கள் கமல்ஹாசனின் சகோதரர்களான சாருஹாசன் மட்டும் சந்திரஹாஸன். அவர்களின் மூலம் கமல்ஹாசன் - மனோபாலா இடையே நம்பு மலர்ந்துள்ளது.
கமல் உடன் நட்பு :
மனோபாலா - கமல்ஹாசன் நட்பு குறித்து பேட்டி ஒன்றில் சுஹாசினி சொன்ன தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்புக்கு முன்னர் சுஹாசினி கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அவர் பேசுகையில் "மனோபாலா கமல்ஹாசன் மூலம் சினிமாவில் நுழைந்தாலும் அவர்கள் இருவரும் சிறிது நாட்களாக பேசிக் கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல்ஹாசன் வரமாட்டார் என்ற ஷாக்கிங் தகவல் ஒன்றை கூறியிருந்தார்.
ஷாக் கொடுத்த சுஹாசினி :
”வழக்கம் போல மனோபாலா அவரிடம் ஏதாவது துடுக்காக பேசியிருப்பார். உன்னோட சித்தப்பா இந்த உலகத்துக்கிட்டேயே பேசுறாரு ஆனா என்னோட மட்டும் பேசமாட்டார் என ஒரு முறை அவர் சுஹாசினியிடம் அழுதுள்ளார் மனோபாலா. ஆனால் இப்போது இருவரும் பேசிக் கொள்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். எங்களின் நிறுவனத்தின் படம் ஒன்றை பார்த்து இதெல்லாம் ஒரு படமா என விமர்சித்துள்ளார். அதனால் எங்களின் படக்குழுவினருக்கு அவர் மீது வருத்தம் இருந்தாலும் மனதால் அவர் மிகவும் நல்லவர்” என கூறியிருந்தார் சுஹாசினி.
மனோபாலாவின் மறைவுக்கு கமல் :
இதனால் தான் மனோபாலாவின் இறுதி சடங்கில் கூட கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லையோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். இருப்பினும் 'பன்முகம் கொண்ட இயக்குநர், நடிகர் மனோபாலாவின் மறைவு செய்தி துயரத்தை அளிக்கிறது' என ட்விட்டர் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை மனோபாலாவின் குடும்பத்தினருக்கு தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.