மேலும் அறிய

Kamalhaasan and Nagesh | ‛நாகேஷை தலையணை வச்சு அழுத்தி கொன்னுடலாமான்னு தோணுச்சு..’ : மேடையில் பேசிய கமல்!

இந்த படத்தை நடிகர் நாகேஷை மனதில் வைத்து எழுதியிருப்பார் போலும் பாலச்சந்தர்.

உலக நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனை முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.  என்னதான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் , அதன் பிறகு உதவி இயக்குநர் , இரண்டாம் நிலை கதாநாயகன் என்றே நடித்து வந்தார். முதன் முதலாக அபூர்வ  ராகங்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கமல்ஹாசன். அந்த படத்தை இயக்கியவர் பாலச்சந்தர். அந்த காம்போவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் இந்த கூட்டணியில் வெளியானது. தனது சினிமா கரியரில் பாலச்சந்தரைத்தான் குருவாகவும் , வாத்தியாராகவும் , ஆசானாகவும் குறிப்பிடுவார் கமல்ஹாசன். அந்த அளவிற்கு பன்முக வித்தைக்காரர் பாலச்சந்தரிடம் பல வித்தைகளை கற்றுக்கொண்டார் கமல்ஹாசன்.

View this post on Instagram
 
A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

ஒரு முறை கிரேஸி மோகன் நாடக மேடை சிறப்பு விழா ஒன்றில் , கமல்ஹாசன் பாலச்சந்தருடனான அனுபவம் ஒன்றை பகிர்ந்துக்கொண்டார். கமல்ஹாசன் , ஆலம் நடிப்பில் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மத லீலை. இந்த படத்தை இயக்கியவர் பாலச்சந்தர்தான். பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கணவன்  , அதனை அறிந்ததும் தாங்கிக்கொள்ள முடியாதவளாக அம்மா வீட்டிற்கு செல்லும் மனைவி. அங்கு சென்றது தனது அப்பாவிற்கு வீட்டு வேலைக்காரிக்கும் இருக்கும் தகாத உறவை அறிந்துக்கொள்கிறாள் நாயகி. இதனை ஏற்கனவே தெரிந்தவர் போல் காட்டிக்கொள்கிறார் அம்மா. உடனே தன் கணவன் வீட்டிற்கே மீண்டும் சென்றுவிட , அங்கு மனைவியின் பிரிவை உணர்ந்த கணவன் , திருந்தி அவளோடு அன்பாக வாழ துவங்குகிறான். இது மன்மத லீலை படத்தின் கதை . 

View this post on Instagram
 
A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

இந்த படத்தை நடிகர் நாகேஷை மனதில் வைத்து எழுதியிருப்பார் போலும் பாலச்சந்தர். அந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த சமயத்தில் , ஏதோ ஒரு காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பிறகு பரப்பாக இங்கும் அங்கும் ஓட வேண்டிய சீனாம் ..அதில் கமல்ஹாசன் தனது திறமையை வெளிப்படுத்த , “ம்ம்ம்ஹூம் ..நல்லா வரல...நாகேஷை மனசுல வச்சு எழுதிட்டேன்” என சலித்துக்கொண்டாராம் பாலச்சந்தர். அப்போதெல்லாம் நாகேஷை தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டால் என்ன? என தோன்றியிருக்கிறதாம் கமல்ஹாசனுக்கு. அதன் பிறகு நடந்ததை நாகேஷிடம் சொன்னாராம் கமல்ஹாசன் . அதற்கு நாகேஷ் பொருமையாக இரு எல்லாம் மாறும் என்றாராம்... அந்த காலம் மாறியது..ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆனது என்கிறார் கமல்ஹாசன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalavar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
TN Rain Update: உஷார்..! தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னையில்? வானிலை நிலவரம்
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Embed widget