Kamal Haasan Next Movie: எதிர்பார்ப்பே எகிறுதே.. வெற்றிமாறனுடன் கைகோக்கும் கமல்?
நடிகர் கமல்ஹாசனை இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிப்புத்துறையில் கால்பதித்த கமல், இன்றும் தன் பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அரசியலிலும் இணையாக பயணித்துக்கொண்டிருக்கிறார் கமல். பரபரப்பாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 இப்போது நகராமல் நிற்கிறது. இந்தியன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்த இயக்குநர் ஷங்கர் அதில் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் காரணமாக படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரணை வைத்து மாஸ் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே கமலின் அடுத்தப்படம் என்னவாக இருக்கும்? யார் இயக்குவார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடும் விதமாக ஒரு மிகப்பெரிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனை இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்கபோவதாக வெளியான தகவல்தான் அது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன். இடைவெளி விட்டே படம் எடுப்பார் ஆனால் வெறித்தனமாக எடுப்பார் என ரசிகர்களிடம் தனி முத்திரையை பெற்றிருக்கும் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் . ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
ஓடிடியில் வருகிறார் ”டாக்டர்” சிவகார்த்திகேயன்! - படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!
2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தையும் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து வெற்றிமாறன் படம் இயக்குவார் எனத் தெரிகிறது.
பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஒரு மாஸ் இயக்குநரான வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் என்ற செய்தி இப்போதே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இது உண்மையென்றால் ஒரு சிறந்த படைப்பு நிச்சயம் வெளிவரும் என ரசிகர்கள் இப்போதே ஆர்வத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
Ratsasan Hindi Remake: அக்ஷய் குமாரின் அடுத்த ரீமேக் ராட்சசன்!