Sarika: வறுமையில் தவித்த கமலின் முன்னாள் மனைவி சரிகா... பாலிவுட்டில் ரீ என்ட்ரி... வெளியான போஸ்டர்
சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா தற்போது UUNCHAI ஹிந்தி திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
![Sarika: வறுமையில் தவித்த கமலின் முன்னாள் மனைவி சரிகா... பாலிவுட்டில் ரீ என்ட்ரி... வெளியான போஸ்டர் Kamal Ex-wife Sarika has given a re-entry in Bollywood film UUNCHAI Sarika: வறுமையில் தவித்த கமலின் முன்னாள் மனைவி சரிகா... பாலிவுட்டில் ரீ என்ட்ரி... வெளியான போஸ்டர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/511f56ee1b1d06b982f5024867fd690b1665743565851224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகம் அறிந்த நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் இன்றும் முன்னணி நடிகர்களுக்கு டஃப் போட்டியாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படம் உலகளவில் சாதனை படைத்தது. இது வரையில் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் எந்த ஒரு திரைப்படமும் அடையாத ஒரு சிகரத்தை தொட்டது "விக்ரம்" திரைப்படம் எனலாம். விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உச்சத்திற்கு சென்றது இப்படம்.
கமலின் திருமண வாழ்க்கை :
நடிகர் கமல்ஹாசன் திரை வாழ்க்கை படு சூப்பராக தான் இன்றும் இருக்கிறது. ஆனால் அவரின் திருமண வாழ்க்கை தான் பாதியிலேயே முடிந்தது. நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா தனது சிறு வயது முதலே படங்களில் நடித்து வந்தவர். பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சரிகாவிற்கும் கமல்ஹாசனுக்கும் 1988ம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். தந்தையை போல மகள்கள் இருவருமே திரைவாழ்வில் மிகவும் பிஸி. நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அப்பா அம்மா இருவரும் பிரிந்தாலும் மகள்கள் இருவருமே அவர்கள் இருவரின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
Presenting the forever graceful and hugely talented Ms. #Sarika as Mala Trivedi in #Uunchai! Directed by BRILLIANT #SoorajBarjatya, catch the film on 11.11.22. Jai Ho! 😍🌈 #Uunchai #Masterpiece #Film pic.twitter.com/bhn2Oy7X60
— Anupam Kher (@AnupamPKher) October 14, 2022
ரீ என்ட்ரி கொடுத்துள்ள சரிகா :
சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த கமலின் முன்னாள் மனைவி சரிகா தற்போது UUNCHAI என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அது குறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும் சரிகா பாலிவூட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார். நடிகர் அமிதாப் பச்சன் நடித்த "யூத்" என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
வறுமையில் தவித்த சரிகா :
கொரோனா காலத்தில் லாக் டவுன் சமயத்தில் வறுமையில் தவித்ததாக ஒரு பேட்டியின் போது தெரிவித்தார். மகள்கள், கணவர் என அனைவரும் உச்சத்தில் இருக்கும் போது இவர் இப்படி சிரமப்படுகிறார் என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல வருடங்களாக படங்களின் பக்கம் தலை காட்டாமல் இருந்த சரிகா தற்போது ராஜஸ்ரீ தயாரிப்பில் சூரஜ் பர்ஜாட்யா இயக்கத்தில் உருவாகியுள்ள UUNCHAI திரைப்படத்தில் நடித்துள்ளர். இப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், அனுபம் கேர், பொம்மன் இரானி, பரிநீதி சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சரிகா பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுப்பது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)