Jurassic World: ஹாலிவுட் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. விரைவில் ரிலீசாகும் ”ஜூராசிக் வேர்ல்ட் - 4” படம்..!
Jurassic World: ஜூராசிக் வேர்ல்டின் 4 ஆவது பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது
ஜுராசிக் பார்க் சீரிஸின் 4 ஆவது பாகத்தை ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லீட்ச் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூராசிக் பார்க்
1993ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட்டின் என்றென்றைக்குமான க்ளாசிக் திரைப்படம் ஜூராசிக் பார்க். திரையரங்குகளில் அன்றைய குழந்தைகளை அலறவைத்து திகிலூட்டிய இத்திரைப்படம், அறிவியலை மிகத் தெளிவாகவும் அழகாகவும் அனைவருக்கும் எடுத்துரைத்தது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பூமியில் வாழ்ந்து அழிந்துபோன டைனோசர்களை மீண்டும் எதார்த்த வாழ்க்கையில் வைத்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்தப் படத்தை ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார்.
மனித இனம் என்றென்றும் பார்த்து வியக்கும், வாழ்ந்து மறைந்த உயிரினமான டைனோசர்களை இவ்வளவு தத்ரூபமாக இதற்கு முன் எவரும் திரையில் பார்த்தில்லை. மைக்கேல் க்ரிக்டன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை, சுமார் ஐந்து லட்சம் டாலர்களுக்கு வாங்கப்பட்டு, பின் சில மாற்றங்களுடன் திரைப்பட வடிவம் பெற்றது.
30 ஆண்டுகளுக்கு முன்னரே கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட்டில் அன்றைய காலக்கட்டத்தில் அதிகம் வசூலித்த படமாக உருவெடுத்தது. 1995ஆம் ஆண்டு என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இப்படம், 65 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று தொலைக்காட்சி வரலாற்றில் பெரும் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றன.
ஜூராசிக் வேர்ல்ட் 4
EXCLUSIVE: After recently tapping David Koepp to pen the script, Universal Pictures new ‘Jurassic World’ pic is gaining some serious momentum as it has zeroed in on a familiar face to direct. While it is early days on the negotiation front, sources tell Deadline David Leitch is… pic.twitter.com/sPZjcxIMmw
— Deadline Hollywood (@DEADLINE) February 5, 2024
ஜுராசிக் பார்க் பட வரிசையில் இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ளன அதே நேரத்தில் ஜுராசில் வேர்ல்ட் பட வரிசையில் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டு பட வரிசைகளும் ஒரே கதையமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இந்தப் படங்களை இயக்கிய இயக்குநர் மற்றும் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் வெவ்வேறானவை. தற்போது ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமாக யுனிவர்ஸல் பிக்சர்ஸ் ஜூராசிக் வேர்ல்ட் 4 ஆவது பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூராசிக் பார்க் படவரிசையின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. மேலும் இதுவரை வெளியான படங்களை விட முற்றிலும் புதிய ஒரு கதையமைப்பு இந்தப் படத்திற்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஹாலிவுட் இயக்குநர் டேவில் லீச் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர் புல்லட் ட்ரெயின் என்கிற புகழ்பெற்ற படத்தை முன்னதாக இயக்கியுள்ளார். இப்படத்திற்கான திரைக்கதையை ஜூராசிக் பார்க் முதல் பாகத்திற்கு திரைக்கதை எழுதிய டேவிட் கோப் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார். ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தை ஃபிராங்க் மார்ஷல் மற்றும் பேட்ரிக் குரோலி ஆகியவர்களுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார்.
மேலும் படிக்க : Sridevi Death Case: நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்.. பிரதமரின் போலி கடிதங்கள்.. யூடியூபரால் பரபரப்பு