Jonita Gandhi Workout Video: சினிமாவில் அரபிக்குத்து... ஜிம்மில் செம கெத்து.. ஜோனிடா வெளியிட்ட அல்டிமேட் வீடியோ
புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளும் ஜொனிதா, ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, பீஸ்ட் படத்தில் ‘அரபிக்குத்து’ ஆகிய பாடல்களை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானவர் ஜோனிடா காந்தி. இவர் தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடா மொழிகளிலும் நிறையப் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டீவான ஜொனிதாவை கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளும் ஜொனிதா, ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாடகி ஜொனிதாவைவிட அவரது முகபாவனைகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதனால், ஜொனிதா வெளியிடும் வீடியோக்கள் எல்லம் ஹிட் ரகம்!
வீடியோவைக் காண:
View this post on Instagram
ஜொனிதா, அனிருத் சேர்ந்து பாடிய ‘அரபிக்குத்து’ பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. வெளியானவுடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இந்த பாடல், இன்ஸ்டா ரீல்ஸ்களிலும், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்களிலும் ஒலிக்க தொடங்கியது. 4 நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 14 நாட்களில் 100 மில்லியன், அதாவது 10 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. மேலும், 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
View this post on Instagram
தமிழ் புத்தாண்டு பண்டிகையை அடுத்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் 14-ம் தேதியா அல்லது 28-ம் தேதியா என்பது உறுதியாகவில்லை. படம் வெளியாவதற்கு தயாராகி வருவதால், ப்ரொமோஷன் பணிகளும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அரபிக் பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதனால், படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை அறிவிக்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்