Lance Reddick: 60 வயதில் உயிரிழந்த ‘ஜான் விக்’ நடிகர் லான்ஸ் ரெட்டிக்… ஹாலிவுட்டை வாட்டும் சோகம்..!
Lance Reddick: ’ஜான் விக்’ படத்தில் சாரன் எனும் கதாப்பாத்திரத்தில் வந்த லான்ஸ் ரெட்டிக், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
கியானு ரீவ்ஸின் ஜான் விக்கின் ஜான் விக் படத்தில் ஹீரோவிற்கு உதவி செய்யும் நபராக வருபவர்தான், சாரன்(Charon). இந்த கதாப்பாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் (Lance Reddick) நடித்திருந்தார். 2014ஆம் ஆண்டு ஜான் விக் படத்தின் முதல் பாகம் வெளியானது. இதையடுத்து, 2,3 பாகங்களைத்தாண்டி இந்த ஆண்டு அப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகிறது. இந்த படத்திலும் சாரன் நடித்துள்ளார். படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அப்படத்தின் நடிகர் உயிரிழந்துள்ளது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லான்ஸ் ரெட்டிக் மரணம்:
ஜான் விக் நடிகர் லான்ஸ் ரெட்டிக், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று இயற்கை எய்தினார். இந்த செய்தியை அவரது தகவல் தொடர்பு அதிகாரி மியா ஹேன்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லான்ஸ் இயற்கை எய்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, அவரது மரணம் குறித்த வேறு எந்த தகவல்களும் அவரிடமிருந்து பகிரப்படவில்லை.
ஜான் விக் படம் மட்டுமன்றி, தி வயர் எனும் பிரபல ஹாலிவுட் தொடரிலும் லான்ஸ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் வருவார். லான்ஸ் ரெட்டிக்கிற்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் உயிரிழந்துள்ள செய்தி, ஜான் விக் பட ரசிகர்கள் உள்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read|தெரு முனையை தாண்டல, அதுக்குள்ள மடில விழுந்துட்டாரு… மயில்சாமி மறைந்தது குறித்து எம்.எஸ்.பாஸ்கர்!
பிரபலங்கள் இரங்கல்:
ஜான் விக் படத்தின் இயக்குனர் சாட் ஸ்டெஹேல்ஸ்கி மற்றும் அப்படத்தின் நாயகன் கியானு ரீவ்ஸ் ஆகியோர் இணைந்து, மறைந்த நடிகர் லான்ஸிற்கு இரங்கள் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதில், “எங்களது நெருங்கிய நண்பர் லான்ஸ் ரெட்டிக்கின் உயிரிழப்பு எங்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. இப்பேற்பட்ட நல்ல நடிகருடன் பணிபுரிந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என அந்த குறிப்பிட்டிருந்தனர். மேலும், லான்ஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், சில நாட்களில் வெளியாகவுள்ள ஜான் விக் படத்தை லான்ஸிற்காக அர்பணிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தி வையர் தொடரின் இயக்குனரும் ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அதில், தேர்ந்த நடிகர், மிகச்சிறந்த மனிதர் மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பர் லான்ஸின் மரணம் தனக்கு மிகுந்த வலியைத் தருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், லான்ஸ் மிக சீக்கிரம் இந்த மன்னுலகை விட்டு மறைந்துளள்தாகவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தி வயர் மட்டுமன்றி இதுவரை லான்சுடன் சேர்ந்து பணிபுரிந்த நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் அவரது மரணத்திற்காக தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.