மேலும் அறிய

Cooku With Comali Season 4: ஆந்திரா Vs கேரளா டிஷ்.. இந்த வாரத்தில் புது சுவாரஸ்யம்... அதிர்ந்த போட்டியாளர்கள்!

பரோட்டா போடுவது, ஆந்திரா Vs கேரளா டிஷ் என டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வழக்கம்போல் கலகலப்பான சமையல் நடக்கும் காட்சிகளுடன் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குக்கு வித் கோமாளி சீசன் 4

விஜய் டிவியின் தனித்துவமான மற்றும் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சீரியசான ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் கலகலப்பான குக்கிங் ஷோவாகவும் ஒளிபரப்பாகத் தொடங்கி மூன்று சீசன்களைக் கடந்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி.

சென்ற ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த சீசன் வழக்கம்போலவே களைக்கட்டி ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த சீசனில் நடிகைகள் ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, ஷெரின், ஷிவாங்கி, நடிகர் ராஜ் அய்யப்பா, காளையன்,கிஷோர் ராஜ்குமா, ஆண்ட்ரின் நௌரிகர் ஆகியோர் குக்குகளாக உள்ளனர்.

பரபரப்புக்கு பஞ்சமில்லை

புகழ், சுனிதா, ஜிபி முத்து, ரவீனா, குரேஷி, தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், மோனிஷா ப்ளெஸ்ஸி, சிவா, ஓட்டேரி சிவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வலம் வருகின்றனர்.

முன்னதாக இந்த சீசனில் இருந்து முதலில் எலிமினேட் ஆன கிஷோர் தன்னை ஷிவாங்கிக்கு பதிலாக எலிமினேட் செய்ததாகக் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. தொடர்ந்து கோமாளிகளில் மக்களின் ஆல்டைம் ஃபேவரைட்டான மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், கோமாளிகளில் ஒருவரான ஓட்டேரி சிவா குடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் பரவியதுடன் அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஓட்டேரி சிவா இந்த செய்திகளுக்கு முன்னதாக மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து சென்ற வாரம் காளையன் வெளியேறினார்.

இம்யூனிட்டி வாரம்

இந்நிலையில் இந்த பரபரப்புகளுக்கிடையே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 13, 14 ஆவது எபிசோடுகளை இந்த நிகழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வாரம் பரோட்டா போடுவது, ஆந்திரா Vs கேரளா டிஷ் என டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வழக்கம்போல் கலகலப்பான சமையல் நடக்கும் காட்சிகளுடன் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்றைய எபிசோடில் வழக்கம்போல் டாஸ்க்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே திடீரென கடைசி 15 நிமிடங்களில் ஒரு dessert உணவை சமைக்க வேண்டும் என ஜட்ஜ் வெங்கடேஷ் பட் கூற போட்டியாளர்கள் அதிர்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் ப்ரொமோக்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்றைய எபிசோடை வழக்கம்போல் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

மேலும் படிக்க: PS 2 First Single: “குந்தவையும் வந்தியத்தேவனும்” .. வெளியானது “பொன்னியின் செல்வன்-2” படத்தின் அப்டேட்.. என்னன்னு தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget