Siren Motion Poster: பொன்னியின் செல்வனுக்கு பின் வெளியாகும் 'சைரன்'! அருண் மொழிவர்மனின் அடுத்தப் படம் இதுதான்!
Siren Motion Poster : சைரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிவுள்ளது
ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த பட அப்டேட் ஒன்று வருவதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றவாரு சைரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிவுள்ளது. பொன்னியின் செல்வன், அகிலன் ஆகிய படங்களில் நடித்த ஜெயம் ரவி சைரன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை அமைக்கவுள்ளார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டரில் பட குழுவினரின் பெயர்களை கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை காணும் போது ஜெயம் ரவியின் சைரன் க்ரைம் திரில்லர் படமாக அமையும் என்று தோன்றுகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சோனி மியூசிக் செளத்தின் யுடியூப் பக்கத்தில் வெளியாகிவுள்ளது.
View this post on Instagram
சமீபமாக வெளியாகும் படங்கள் அனைத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கதாப்பாத்திரம் அவ்வளவாக பேசப்படவில்லை ஏனென்றால் அவர் அப்படத்தில் நடித்துள்ளாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவே பாதி நேரம் முடிந்துவிடுகிறது. அப்படியும் அவர் உள்ளார் என்று கண்டுபிடித்துவிட்டாலும், அவர் நடிக்கும் கதாப்பாத்திரம் வீக்காக இருக்கும். கீர்த்தியின் நடிப்பில் எந்த குத்தமும் இல்லையென்றாலும் கதை செலக்ஷனில் சொதப்பி விடுகிறார். இப்போது ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடிக்கவுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி :
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியின் செல்வன்" எனும் காவிய திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைதுறையினரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதால் அதில் கவனம் சிதறக் கூடாது என்பதற்காக அவரின் மற்ற வேலைகளை குறைத்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : 'மீண்டும் சந்திக்கலாம்'.. சூரிய அஸ்தமனத்தை உருகி ரசித்த விக்கி-நயன் ஜோடி!
வலிமையை ஓரம்கட்டிய திருச்சிற்றம்பலம்.. தொடரும் பழத்தின் வேட்டை.. எவ்வளவு வசூல் தெரியுமா?