Jayam Ravi -Aarti Ravi : ஆர்த்திக்கு கண்டிஷன் போட்ட ஜெயம் ரவி? வைரலாகும் விவாகரத்து விவகாரம்
Jayam Ravi Aarthi Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து பல யூகங்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்து வைரலாகும் சில தகவல்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. மிகவும் ஜாலியான ஒரு ஹீரோவான ஜெயம் ரவிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் அவரின் இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. அதை தொடர்ந்து தற்போது 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்துள்ளார். இது ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைவாழ்க்கையில் படு பிஸியாக இருந்து வரும் ஜெயம் ரவி பர்சனல் லைஃபில் தற்போது பூகம்பம் வெடித்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக சோஷியல் மீடியா எங்கும் ஜெயம் ராவின் விவாகரத்து குறித்த செய்திகள் தான் மிகவும் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அதை தொடர்ந்து உடனடியாக அடுத்து ஒரு விவகாரத்தா என தமிழ் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். இருப்பினும் இந்த விவாகரத்து என பேசப்படுவதற்கான சரியான காரணம் என்ன என்பது ஒரே மர்மமாகவே உள்ளது.
'ஜெயம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் இருந்தாலும் எங்கு சென்றாலும் காதலர்கள் போலவே அந்நியோன்னியமாக கலந்து கொண்டு வந்தனர். அவர்களின் ரொமான்டிக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் நிரம்பி வழிவதே அவர்களின் காதலுக்கு சாட்சியாகும். இப்படி சந்தோஷமாக பயணித்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென சூறாவளி வீசியது போல பிரச்னைகள் அடுத்தடுத்து வெடிக்க துவங்கின.
ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் இருந்த புகைப்படங்களை நீங்கியதால் சந்தேகம் வர துவங்கியது. பொன்னியின் செல்வன் நடிகையுடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கத்தால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் வெடிக்க துவங்கின என கூறப்படுகிறது. ஆர்த்தியும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவரே. அவரின் அம்மா சுஜாதா விஜயகுமார் பல பிரபலமான சீரியல்கள் மற்றும் ஜெயம் ரவியின் பல படங்களையும் தயாரித்துள்ளார்.
ஆர்த்தியின் தாயார் சுஜாதா முதல் தோழி நடிகை திரிஷா வரை பலரும் சினிமா துறையில் சாதித்து வர தனக்கும் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஸ்காட்லாந்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட், பேஷன் துறையில் ஆர்வம் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளாக குடும்ப தலைவியாகவே இருந்து வந்துள்ளார் ஆர்த்தி. இது அவருக்கு ஒரு வித சலிப்பை கொடுக்க, தானும் சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதன் மூலமோ அல்லது தனக்கென ஒரு தனி தொழிலை தொடங்கவோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜெயம் ரவிக்கு அதில் விருப்பம் இல்லாமல் மனைவிக்கு கண்டிஷன் போட்டது தான் தற்போது விவாகரத்து வரை கொண்டு சென்றுள்ளது எனவும் கூறப்படுகிறது. தனக்கு எந்த அடையாளமும் இல்லை என்ற ஆதங்கம்தான், ஆர்த்தியின் அப்செட்டுக்கு காரணம். இதுவரையில் குடும்பம் குழந்தைகள் என இருந்த ஆர்த்திக்கு இனியாவது ஜெயம் ரவியை பிரிந்து தன்னுடைய கேரியரை நோக்கி பயணிக்கலாம் என்ற எண்ணம் வர காரணம் என கூறப்படுகிறது. ஆர்த்தியின் இந்த முடிவுக்கு ஜெயம் ரவி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதில்தான் அது விவாகரத்து வரை போகுமா இல்லையா என்பது முடிவாக போகிறது என சமூக வலைதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.