Jhanvi Kapoor: ஸ்டார் பேபின்னு வாய்ப்பு கொடுக்குறாங்களா? நான் அப்படி இல்ல.. ஸ்ரீதேவி மகளின் வாய்ஸ்
சில வாய்ப்புகளை எளிதாக பெற்றாலும் அதற்காக கடுமையாக உழைத்துள்ளேன். மக்கள் அதை பார்க்கப்போவதில்லை...
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்வி கபூர் மிலி, குட்லக் ஜெர்ரி மற்றும் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இருப்பினும் தான் ஏராளமான நெகடிவ் விமர்சனங்களால் பாதிக்கப்படுவதாகவும் 'நெபோ பேபி' என குறிப்பிட்டு காயப்படுத்துவதாகவும் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் மனம் திறந்தார்.
காயப்பட்ட ஜான்வி :
பாலிவுட் சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்து பேசுகையில் சில திரைப்பட வாய்ப்புகள் எளிதாக கிடைத்தாலும் அதை அவர் பாதகமாகவே உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது கடின உழைப்பையும், முழு ஈடுபாட்டையும் கொடுத்ததும் சிலர் இணையம் மூலம் கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்துவதாகவும் அவரின் நடிப்பு திறனை குறை கூறுவதும் முகம் தெரியாதவர் 'நெபோ பேபி' என குறிப்பிடுவதையும் விரும்பவில்லை என தெரிவித்தார் ஜான்வி கபூர்.
View this post on Instagram
கரண் ஜோஹரின் தயாரிப்பில் 2018ம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவரது தங்கை குஷி கபூர் விரைவில் ஜோயா அக்தரின் நெட்ஃபிக்ஸ் திரைப்படமான தி ஆர்ச்சீஸ் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
கடின உழைப்பு யாருக்கும் தெரியாது:
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் "நான் கடின உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கிறேன். மேலும் என் வாழ்க்கையில் எனது இலக்கு குறித்து தெளிவாக இருக்கிறேன்". எனது அம்மா ஸ்ரீதேவியின் புகழுக்கு ஏற்ப வாழ விரும்புகிறேன். இதை ஆணவத்தினால் சொல்லவில்லை. எனது பெற்றோருக்கும் பார்வையாளர்களுக்கும் அதை திருப்பி தர வேண்டும் என்ற ஆசையில் சொல்கிறேன்.
சில வாய்ப்புகளை எளிதாக பெற்றாலும் அதற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். மக்கள் அதை வந்து பார்க்கப்போவதில்லை. அவள் மிகவும் அதிர்ஷ்டசாலி அவளுக்கு வாழ்க்கையில் எல்லாம் எளிதாக கிடைத்துவிட்டது என்றுதான் சொல்வார்கள். அதனால் நான் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன், மதிக்கிறேன். இப்படி பேசுவதற்காக நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. ஏனென்றால் நான் என்ன செய்கிறேனோ அதை நன்றாக செய்கிறேன் என நம்புகிறேன்" என பேசியிருந்தார் ஜான்வி கபூர்.