(Source: ECI/ABP News/ABP Majha)
தன் பெயரின் இருந்து சாதிப்பெயரை நீக்கியது ஏன்? ஜனனி கொடுத்த விளக்கம்..!
நடிகை ஜனனி ஐயர் தனது பெயரில் இருந்து ஐயர் என்ற சாதிப்பெயரை நீக்கியது ஏன் என்று விளக்கியுள்ளார்.
நடிகை ஜனனி ஐயர் தனது பெயரில் இருந்து ஐயர் என்ற பட்டத்தை நீக்கியது ஏன் என்று விளக்கியுள்ளார்.
ஜனனி ஐயர் சென்னையில் பிறந்தவர். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார். விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திரையில் தோன்றினார்.
இவரின் முதல் படம் திருதிரு துருதுரு. இருந்தாலும் இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் அவர் நடித்த பேபி என்ற திரைப்படம் தான் அவருக்குப் பெரிய பிரேக்த்ரூ படம். அதன் பின்னர் பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், கசடதபற என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இடையில், பிக்பாஸ் சீசன் 2 மற்றும் 3ல் கலந்து கொண்டார். இந்நிலையில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஐயர் என்ற சாதிப் பெயரை நீக்கியதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
தெகிடிக்குப் பின்னரே வெறும் ஜனனி என்றே என்னை அறிவிக்கச் சொல்லியிருக்கிறேன். பெரிதாகக் காரணம் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என நினைத்தேன். அதனால் பெயருக்குப் பின்னால் இருக்கும் பட்டம் வேண்டாம் என்று முடிவு செய்து துறந்தேன். அவ்வளவு தான் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல், இன்னும் பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதில் அளித்துள்ளார். இன்னொரு முறை இயக்குநர் பாலா நடிப்பில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அதை அதிர்ஷ்டமாகக் கருதி ஓடோடி நடிப்பேன் எனக் கூறியிருக்கிறார். இயக்குநர் பாலா ஒரு காட்சி படமாக்கப்பட்ட பின்னர் காட்டும் ரியாக்ஷனை வைத்தே அவருக்கு அந்தக் காட்சி திருப்தியளித்ததா என்பதைத் தெரிந்துகொள்வோம் என்றார். காமெடி சீனுக்கு சிரித்துவிட்டார் என்றால் எல்லோரும் சரியாக நடித்துள்ளோம் என்று அர்த்தம் என்றார்.
நடிகை அஞ்சலி தனது சிறந்த தோழி என்றும், திரைத்துறையில் இரண்டு பெண்கள் நீண்ட காலம் நட்பு பாராட்டுவது கடினம் என்பதெல்லாம் பொய், நானும், அஞ்சலியும் சிறந்த நண்பர்கள். அதேபோல் பிக்பாஸில் பங்கேற்ற பின்னர் கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் கல்யாண் ஆகியோரும் தனக்கு நண்பர்களாகிவிட்டதாக அவர் கூறினார்.
தனக்கு துள்ளலான கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கும் என்றாலும் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் மட்டுமே எப்போதும் தேங்கிவிடாமல் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புவதாகவும் ஜனனி கூறியிருக்கிறார்.
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
என்ற தெகிடி படப்பாடலையும் பாடிக்காட்டி அசத்தினார்.