Avatar at Japan: ஜப்பானில் புரொஜெக்டர்களை செயலிழக்க செய்த அவதார் தொழில்நுட்பம்: ஏமாற்றத்தில் திரும்பிய ஜேம்ஸ் கேமரூனின் ரசிகர்கள்...!
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஜப்பானில் உள்ள சில திரையரங்குகளில் ப்ரொஜெக்டர்களை செயலிழக்கச் செய்துள்ளது. கோபத்தில் இருந்த பார்வையாளர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. இந்த வெற்றியால் அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் செலுத்தும் அவதார் : தி வே ஆப் வாட்டர் :
அதன்படி 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் வசூலை அள்ளியுள்ளது. அந்த வகையில் ஜப்பானில் திரையிடப்பட்ட 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' சில புரொஜெக்டர்களை செயலிழக்கச் செய்து வருகிறது எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் வெளியான மற்ற படங்களை காட்டிக்கும் அவதார் திரைப்படமே எங்கும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
AVATAR: THE WAY OF WATER
— Brendan Hodges (@metaplexmovies) December 19, 2022
Act I: rough but good
Act II: messy but stunning
Act III: one of the most spellbinding, amazing hours of blockbuster cinema in the last thirteen years pic.twitter.com/z4P0Tx3nzP
ஜப்பான் திரையரங்கத்தில் ஏற்பட்ட கோளாறு :
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால் ஜப்பானில் உள்ள சில திரையரங்குகளில் ப்ரொஜெக்டர்களை செயலிழக்கச் செய்துள்ளது. தற்போது வெளியான அறிக்கையின் படி இந்த கோளாறுக்கு சரியான காரணம் என்ன என்பது தெளிவாக இன்னும் ஆராயப்படவில்லை. இருப்பினும் நகோயாவில் உள்ள ஒரு திரையரங்கத்தில் இப்படத்தின் வினாடிக்கு 48 பிரேம்கள் என்ற உயர் பிரேம் ரேட் பிளேபேக்கை வினாடிக்கு 24 பிரேம்களுக்குக் குறைத்ததன் மூலம் இந்த கோளாறு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது டெக்கனிகள் சார்ந்த சிக்கலாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, வால்ட் டிஸ்னியின் திரைப்படம் ஜப்பானில் முதல் முறையாக திரையிடப்படும் போது இது போன்ற டெக்கனிகள் சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Check out the Japanese poster for #AvatarTheWayOfWater only in theaters December 16.
— Avatar (@officialavatar) November 23, 2022
Get tickets now: https://t.co/9NiFEII97M pic.twitter.com/HwGLVlnwSC
பார்வையாளர்களை ஏமாற்றிய அவதார் :
அவதார் திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்க்க சென்ற ரசிகர்கள் சந்தித்த திடீர் ரத்து காரணமாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவ தொடங்கின. ஒரு திரையரங்கத்தில் பிரேம் ரேட் பிளேபேக் பாதியாக குறைக்கப்பட்டது. டோஹோ கோல், டோக்கியூ கார்ப், யுனைடெட் சினிமாஸ் கோ போன்ற திரையரங்குகளில் பார்வையாளர்கள் முற்றுகையிட்டனர் என கூறப்படுகிறது.





















