James Cameron: அவதார் வாய்ப்பை தவறவிட்ட மேட் டாமன்; பறிபோன 2000 கோடி.. நக்கலடித்த ஜேம்ஸ் கேமரூன்!
ஜேம்ஸ் கேமரூன் கொடுத்த வாய்ப்பை நிராகரித்து இன்று வேதனை படும் நடிகர் மாட் டாமன். காரணம் இதுதானா...
'அவதார்' திரைப்படம் மூலம் உலக மக்களை ஆக்கிரமித்தவர் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். 2009ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் மூலம் மக்களை தன் வசம் ஈர்த்த இந்த இயக்குனரின் அடுத்த பாகம் வெளியாக 13 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. மிகவும் ஆவலாக இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு திரை விருந்தாய் அமைந்தது அண்மையில் வெளியான அவதார் : தி வே ஆஃப் வாட்டர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது ஜேம்ஸ் கேமரூன் மேட் டாமன் குறித்து பேசி இருந்தார். 2009ல் வெளியான அவதார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாட் டாமன் இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளார். அவர் நிராகரித்ததை குறித்து ஜேம்ஸ் கேமரூன் கூறுகையில் " இந்த வாய்ப்பை இழந்ததற்காக மிகவும் வருத்த படுகிறார்" என கூறியிருந்தார்.
மேட் டாமன் நிராகரித்த பிறகு தான் அந்த ரோலில் நடிக்க புதுமுகமாக சாம் வொர்திங்டனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் மேட் டாமன் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்து வந்ததால், ஜேம்ஸ் கேமரூன் வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Matt Damon on turning down #Avatar due to scheduling conflicts: “I was offered a little movie called Avatar, James Cameron offered me 10% of it. I will go down in history… you will never meet an actor who turned down more money.”
— Film Updates (@FilmUpdates) July 9, 2021
(https://t.co/kmZNvgPHBq) pic.twitter.com/U6VusGUDfT
2021ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், கேமரூன் இப்படத்தில் டாமன் நடிக்க வேண்டும் என விரும்பியதுடன் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் பெற்ற லாபத்தில் இருந்து 10 % வழங்குவதாக ஒப்பந்தம் செய்தார் என ஒரு அறிக்கை கூறுகிறது. அவதார் திரைப்படத்தில் உலகளவில் $2.9 பில்லியனுக்கு மேல் வசூலித்தது, இது டாமனுக்கு $250 மில்லியன் (ரூ. 2000 கோடி) சம்பாதித்து கொடுத்திருக்கும்.
இது போல அதிக பண லாபத்தை நிராகரித்த ஒரு நடிகை நீங்கள் இதுவரையில் கண்டு இருக்க மாட்டீர்கள் என கூறியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். மேலும் அவதார் படத்தின் அடுத்த பார்ட்டில் மேட் டாமனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என கேட்டதற்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும் ஆனால் அந்த 10% ஷேர் கண்டிப்பாக கிடைக்காது என்றார்.