Rajinikanth: நெல்சனுக்கு கட்டிப்பிடி வைத்தியம்...அனிருத்துக்கு முத்தம்... ஜெயிலர் விழாவில் செம குஷியில் சூப்பர் ஸ்டார்!
Jailer Audio Launch: முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக ரஜினி இப்படத்தில் நடித்துள்ளார்.
Jailer Audio Launch: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினி தவிர பிற மொழி சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்டோருடன் தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ஜெயிலராக இப்படத்தில் நடித்துள்ளார். நெல்சனின் வழக்கமான பாணியில் ரஜினிகாந்தின் மாஸ் ஃப்ளேவருடன் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு முன்னதாக மாஸ் எண்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த் வந்த வேகத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை கட்டிப்பிடித்து அன்புடன் ஆரத் தழுவிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The superstar alapparai aarambham😍🔥 #JailerAudioLaunch @rajinikanth @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi #Jailer #JailerFromAug10 pic.twitter.com/iHaMDE9G4W
— Sun Pictures (@sunpictures) July 28, 2023
மேலும் இசையமைப்பாளர் அனிருத்தை வாரி அணைத்து ரஜினி முத்தம் கொடுக்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த விழாவில் ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.
முன்னதாக இந்த விழாவில் அனிருத் ஹூக்கும் பாடலை அரங்கம் அதிர பாடியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. எனர்ஜி மேலோங்க அனிருத் இப்பாடலைப் பாடிய நிலையில், ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டனர். மேலும் காவாலா பாடலுக்கு தமன்னா விழா அரங்கில் நடனமாடியதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் விழாவில் பேசிய இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்திடம் கதை சொல்ல எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தபோது, எனக்கு நம்பிக்கை அளித்தது நடிகர் விஜய் தான் எனத் தெரிவித்துள்ளார். நெல்சனின் இந்தப் பேச்சு வரவேற்பைப் பெற்றுள்ளது.