Jai Bhim Book: புத்தகமாக வெளியாகும் ’ஜெய் பீம்’.. எப்போது தெரியுமா? மகிழ்ச்சியுடன் அறிவித்த சூர்யா!
ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் படத்தின் திரைக்கதையை நூலாகக் கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ்.
’ஜெய் பீம்’ திரைப்படம் புத்தகமாக வெளியாக உள்ளதாகவும் 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பகிர்ந்துள்ள பதிவில், ”ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் படத்தின் திரைக்கதையை நூலாகக் கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 2021ஆம் ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய ‘ஜெய் பீம் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறியது. படத்தில் சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருந்தார். இந்தப் படம் ஒரு பக்கம் பாராட்டுகளையும் மற்றொரு பக்கம் சர்ச்சையையும் கிளப்பியது.
ஓடிடியில் வெளியானபோதிலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய்பீம் ஆஸ்கர் ரேஸிலும் ஓடியது. ஆனால் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலினும் படத்தை கண்டுகளித்து பாராட்டுகளை தெரிவித்திருந்தார். வெறும் சினிமா ரசிகர்கள் என்பதையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்தது ஜெய்பீம்.
முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த சூர்யா - ஞானவேல் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.