'கேஜிஎஃப்' குழுவில் கைகோக்கும் சிம்பு? ரெடியாகுது பான்-இந்தியா படம்! அப்டேட் இதுதான்!!
நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, அந்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் பான் இந்தியா திரைப்படம் என்றும், அதில்தான் சிம்பு நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
!['கேஜிஎஃப்' குழுவில் கைகோக்கும் சிம்பு? ரெடியாகுது பான்-இந்தியா படம்! அப்டேட் இதுதான்!! Is Simbu in a film produced by the production company that made KGF Pan India film directed by Sudha Kongora 'கேஜிஎஃப்' குழுவில் கைகோக்கும் சிம்பு? ரெடியாகுது பான்-இந்தியா படம்! அப்டேட் இதுதான்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/21/91e5565c28085188c9068ebe4851adb41658380709_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு மீண்டும் பெரிய ஹிட் கொடுத்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் அட்டகாசமான நடிப்பைக் கொண்ட இப்படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிம்பு லைன்-அப்
சிம்பு தற்போது கவுதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானி சங்கர் உடன் நடித்து வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இப்பட வேலைகள் விரைவில் முடிவடைந்து டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனம்
கேஜிஎஃப் இன் இரு பாகங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட்டில் தற்போது பரபரப்பான செய்திகள் பரவி வருகின்றன. சுதா கொங்கரா இயக்கப்போகும் பான் இந்தியன் திரைப்படம் குறித்து பல மாதங்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்பு - சுதா கூட்டணி
சுதா கொங்கோரா தமிழில் இயக்கிய 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை முடித்துள்ளார். அந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் நிலையில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சுதா படம் இயக்குகிறார் என்ற செய்தியும் வந்தது. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, அந்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயரிக்கும் படம்தான் பான் இந்தியா திரைப்படம் என்றும், அதில்தான் சிம்பு நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா - சுதா கூட்டணி
முன்னதாக, சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படம் செய்வதாக சுதா ஏற்கனவே கூறி இருந்தார், இது அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்த சூரரை போற்று திரைப்படத்தை விட மிகவும் அழுத்தமான கதைகளத்தை கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. பெரிய பட்ஜெட் மற்றும் நீண்ட நாள் ப்ரி-புரொடக்ஷனை கருத்தில் கொண்டு இந்த திரைப்படம் 2024 இல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)