Actor Vinay Rai : பிரபல நடிகையுடன் காதல்..! ஸ்டைலிஷ் வில்லனுக்கு விரைவில் டும்.. டும். டும்..!
துப்பறிவாளன் வில்லத்தனத்துக்கு பிறகு தமிழின் ஸ்டைலிஷ் வில்லனாகவே தற்போது மாறியுள்ளார் வினய்.
தற்போதைய கோலிவுட்டின் ஸ்டைலிஷ் வில்லனாக ரவுண்டடிக்கத் தொடங்கியுள்ளார் நடிகர் வினய். மிஷ்கின் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் மூலம் சாக்லெட் பாய் இமேஜை உடைத்து வில்லத்தனத்துக்குள் நுழைந்தார். முன்னதாக உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் வினய். முதல் படத்திலேயே இளசுகளின் மனதைக் கொள்ளைக் கொண்டார் வினய். பின்னர் ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை போன்ற படங்களிலும் தன்னை கவனிக்க வைத்தார். அடுத்தடுத்து தமிழில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வினய் பெரிய கேப் விட்டார். அதன்பின்னர்தான் துப்பறிவாளனில் தன்னுடைய கேரக்டரை மாற்றி களம் இறங்கினார்.
வில்லன்..
துப்பறிவாளன் வில்லத்தனத்துக்கு பிறகு தமிழின் ஸ்டைலிஷ் வில்லனாகவே தற்போது மாறியுள்ளார் வினய். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டரிலும், சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டினார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
View this post on Instagram
வினயின் காதல்..
ஹீரோ, வில்லன் என பயணப்பட்டுக் கொண்டிருக்கும் வினய் எப்போது திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் கோலிவுட்டில் அவ்வப்போது எழுவது உண்டு. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. விரைவில் வினய்க்கு திருமணம் என கிசுகிசுக்கிறது கோலிவுட் உலகம். வினய் நடிகை விமலாராமனை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. தகவல் உறுதி என்றால் அடுத்த சினிமா ஜோடியாக வினய் - விமலாராமன் இருப்பார்கள்.
View this post on Instagram
விமலா ராமன்..
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார் விமலா ராமன். தமிழில் சேரனுடன் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்திருந்தார்.