Iravin Nizhal: பார்த்திபனுக்கு டானிக்.. ’இரவின் நிழல்’ படம் பற்றி பாராட்டிய எழுதிய சூப்பர்ஸ்டார்..
படத்தைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ரஜினிகாந்த், பார்த்திபனை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார்.
![Iravin Nizhal: பார்த்திபனுக்கு டானிக்.. ’இரவின் நிழல்’ படம் பற்றி பாராட்டிய எழுதிய சூப்பர்ஸ்டார்.. Iravin Nizhal superstar Rajinikanth appreciates actor Parthiban for the effort and making of movie Iravin Nizhal: பார்த்திபனுக்கு டானிக்.. ’இரவின் நிழல்’ படம் பற்றி பாராட்டிய எழுதிய சூப்பர்ஸ்டார்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/21/5293a8774351934455d41b8ca82692dc1658399287_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
’இரவின் நிழல்’ திரைப்படம் பார்த்து பலரும் இயக்குநர் பார்த்திபனை வாழ்த்தி வரும் நிலையில், முன்னதாக படம் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வாழ்த்தியுள்ளார்.
இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’ படம் முன்னதாக ஜூலை 15ஆம் தேதி வெளியானது. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம், வெளியானது முதல் நல்ல வரவேற்பையும் நெட்டிசன்கள், திரைப் பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் வாழ்த்து
அந்த வகையில், முன்னதாக இரவின் நிழல் படம் பார்த்து மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இரவின் நிழல் படம் ஒரு அசாத்திய முயற்சி என்றும் உலக சாதனை என்றும் வாழ்தியுள்ளார்.
மேலும் படிக்க: Sivaji Death Anniversary: தெறிக்கும் வசனம்.. அசரடிக்கும் உடல்மொழி.. நடிப்பில் அசுரன்.. சிவாஜி கணேசனின் நினைவுதினம் இன்று!
படத்தைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ரஜினிகாந்த், பார்த்திபனை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார்.
மேலும் கடிதத்தில் “இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்... அவரது அனைத்து படக்குழுவினருக்கும்... மதிப்பிற்குரிய ஆர்.ரகுமான் அவர்களுக்கும்... முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்... எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்களும்" எனத் தெரிவித்துள்ளார்.
’இரவின் நிழல்’ படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: நித்தி-ரஞ்சிதாவை டோட்டல் டேமேஜ் செய்த இரவின் நிழல்... ‛நான் என்ன காட்டுவது... அவரே காட்டுவார்’ -பார்த்திபன் கிண்டல்!
"பார்த்திபனுக்கு சினிமா பைத்தியம்,," இரவின் நிழல் ப்ரிவ்யூ பார்த்து பிரமித்த ஜேம்ஸ் வசந்தன்!
Liger Trailer : மாஸான ஆக்ஷன் சம்பவத்தை பாக்கப்போறீங்க .. வெளியானது லிகர் படத்தின் ட்ரைலர்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)