'சேரின்னாலே கெட்டவார்த்தையா?' சர்ச்சையில் சிக்கிய இரவின் நிழல் நடிகை!
சேரிகளுக்கு போனால் நாம் கெட்ட வார்த்தைகளைத்தான் கேட்க முடியும் என்று நடிகை பிரிகிடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சேரிகளுக்கு போனால் நாம் கெட்ட வார்த்தைகளைத்தான் கேட்க முடியும் என்று நடிகை பிரிகிடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.
View this post on Instagram
இரவின் நிழல் படம் பார்த்த பல சினிமா பிரபலங்கள் இயக்குநர் பார்த்திபனின் இந்த “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
என்ன @rparthiepan கதை சொல்லும் போது இப்படி தான் சொன்னீங்களா? @Brigidasaga22 மன்னிப்பு கேட்க வேண்டும்! இது தான் சாதிய பார்வை, சேரிகளில் மட்டுமே கெட்ட வார்த்தை பேசுவாங்க என்பது எத்தனை காலத்து பொதுபுத்தியின் அபத்தம்! pic.twitter.com/QJZCsDgSAu
— Santhosh Che (@CheSanthosh) July 17, 2022
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை பிரிகிடா. பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த அவருக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப்பேட்டியில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படங்களை அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தை இருக்க கூடாதுதான். இங்கு ஒருவனது வாழ்கையில் கெட்டது மட்டுமே நடந்திருக்கிறது. அப்படியானால் அவனது வாழ்கையை அப்படித்தான் சொல்ல முடியும். சேரிகளுக்கு போனால் நாம் அந்த மாதிரியான வார்த்தைகளைத்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ரொம்பவும் மாத்திர முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு போனால் எப்படி பேசுவார்கள் என்று.. அந்த மாதிரியான விஷயங்களை இந்தப்படத்தில் தவிர்க்கவே முடியாது” என்றார். இவரது இந்தப்பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் கண்டனங்களை பெற்று வருகிறது.