(Source: ECI/ABP News/ABP Majha)
Box Office Collection: இறைவன், சந்திரமுகி 2.. இதுவரை பாக்ஸ் ஆபீசில் கல்லா கட்டியது எவ்வளவு?
படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததால் குழந்தைகள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், திரைக்கு வந்த இறைவன் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
Box Office Collection: ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ள இறைவன் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.5.5 கோடிக்கு வசூலை குவித்துள்ளது.
இறைவன் கலெக்ஷன்:
ஐ.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் கடந்த 28ம் தேதி திரைக்கு வந்தது. த்ரில்லர் படமான இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததால் குழந்தைகள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், திரைக்கு வந்த இறைவன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஹரி கே வேதாந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சந்திரமுகி 2 கலெக்ஷன்:
இந்த நிலையில் திரைக்கு வந்த முதல் நாளில் ரூ.2.5 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.4 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.1.87 கோடியும் என மொத்தமாக ரூ.5.77 கலெக்ஷனை குவித்துள்ளது. இதேபோன்று இறைவன் படத்துக்கு போட்டியாக கடந்த 28ம் தேதி திரைக்கு வந்த மற்றொரு படம் தான் சந்திரமுகி2.
பி. வாசு இயக்கிய சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா என பலர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சந்திரமுகி 2 படத்திற்கு ரசிகர்கள் சென்று வருகின்றனர். சந்திரமுகி 2 முதல் நாளில் ரூ.8.25 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.4. 35 கோடியும், மூன்றாம் நாளில் ரூ. 5 கோடியும் என மொத்தமாக ரூ.17.60 கோடி வசூலை பெற்றுள்ளது.
மார்க் ஆண்டனி, ஜெயிலர்:
இதேபோன்று கடந்த 15ம் தேதி விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரூ.67.2 கோடியை வசூலித்துள்ளது. டைம் ஃபிக்ஷனில் காமெரி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வசூலை பெற்று வருகிறது.
இதேபோன்று நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கடந்த 7ம் தேதி ரிலீசான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.595.75 கோடி வரை வசூலாகியுள்ளது. ஆக்ஷன் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள ஜெயிலர் படம் பான் இந்தியா அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது. ஜெயிலரில் ரஜினி மட்டும் இல்லாமல் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்து அசத்தியுள்ளனர்.
கடந்த ஒன்றாம் தேதி விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்துள்ள குஷி படம் ரூ.48.26 கோடியை வசூலித்துள்ளது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் ரசிகர்களே தயாரா... இன்னும் சில மணி நேரங்களில் பிக் பாஸ் 7.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!