IPL 2025 RR vs DC: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி
IPL 2025 DC vs RR: ராஜஸ்தான் - டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு அபிஷேக் போரல், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல் அதிரடி பேட்டிங்கால் 188 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ராஜஸ்தானுக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் - சாம்சன் அதிரடி:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் - சாம்சன் ஜோடி அதிரடி காட்டியது. குறிப்பாக, சாம்சன் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். அப்போது, காயம் காரணமாக சாம்சன் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். அவர் 19 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் வெளியேறினார். பின்னர் வந்த ரியான் பராக் 8 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார்.
திடீர் பவுலிங் தாக்குதல்:
ஆனால், அவர் 51 ரன்களை எட்டியபோது அவர் அவுட்டானார். குல்தீப் யாதவ் சுழலில் 37 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 ரன்களில் அவுட்டானார். பின்னர், நிதிஷ் ராணா - துருவ் ஜோரல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடி காட்டியது. இதனால், குறிப்பாக நிதிஷ் ராணா அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார்.
குல்தீப் யாதவ் சுழலில் அவருக்கு எல்பிடபுள்யூ ஆனதை 3வது அம்பயர் மூலமாக நாட் அவுட் என்று தெரிந்து களத்தில் மீண்டும் டெல்லிக்கு குடைச்சல் தந்தார். டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் ஸ்டார்க், முகேஷ், மோகித், குல்தீப் ஆகியோரை பயன்படுத்தினார். ஸ்டப்ஸ், விப்ராஜை பயன்படுத்தியதற்கு பலன் கிடைக்கவில்லை.
கடைசியில் களேபரம்:
கடைசி 18 பந்துகளில் 31 ரன்கள் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது. நிதிஷ் ராணா 26 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 50 ரன்களை எடுத்தார். ஆடடத்தின் முக்கியமான கட்டத்தில் ராணாவை ஸ்டார்க் காலி செய்தார். அவரது பந்தில் அவர் எல்பிடபுள்யூ ஆனார். அவர் 28 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேறினார்.
கடைசி ஓவர் பரபரப்பு:
கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஜுரேல் டெல்லியை அச்சுறுத்தினார். அவர் மோகித் சர்மா பந்தில் ஒரு சிக்ஸர் விளாச கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 1 ரன் எடுக்க, அடுத்த பந்திலும் 1 ரன் எடுக்க 3வது பந்தில் 2 ரன் எடுக்க கடைசி 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்திலும் 2 ரன் எடுக்க கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் 1 ரன் எடுக்க கடைசி பந்தில் 2 ரன் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஜுரல் 1 ரன் எடுக்க 2வது ரன்னுக்கு ஓடும்போது அவரை கே.எல்.ராகுல் ரன் அவுட்டாக்கினார்.
சூப்பர் ஓவர் த்ரில்லர்:
இதனால், ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. ஐபிஎல் தொடரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் சென்றது. இதையடுத்து, சூப்பர் ஓவரை ஸ்டார்க் வீசினார். ராஜஸ்தானுக்காக ஹெட்மயர் - ரியான் பராக் தொடங்கினர். முதல் பந்து டாட் ஆக, 2வது பந்தில் ஹெட்மயர் பவுண்டரி விளாசினார்.
3வது பந்தில் 1 ரன் வர 4வது பந்தில் பவுண்டரி விளாசினார் பராக். 4வது பந்து நோ பாலாக வந்தது. 4வது பந்தை அவர் மீண்டும் வீசியபோது அந்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சித்து பராக் ரன் அவுட்டானார். அடுத்த பந்திலும் 2 ரன் எடுக்க முயற்சிக்க ஜெய்ஸ்வால் ரன் அவுட்டானார். இதனால், 2 பந்துகள் மீதம் வைத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லிக்கு 10 ரன்கள் இலக்காக மாறியது.
இதையடுத்து, ராஜஸ்தான் வெற்றிக்காக சந்தீப் சர்மா வீசினார். கே.எல்.ராகுல் - ஸ்டப்ஸ் களமிறங்கினர். முதல் பந்திலே 2 ரன்கள் ராகுல் விளாச 2வது பந்தில் ராகுல் பவுண்டரி விளாச கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் ஒரு ரன் எடுக்க, 4வது பந்தை ஸ்டப்ஸ் எதிர்கொண்டார். 4வது பந்தில் ஸ்டப்ஸ் சிக்ஸர் விளாசினார். இதனால், டெல்லி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது.

