மேலும் அறிய

‛நஷ்டஈடு தரவான்னு அஜித் கேட்டாரு... ஒரு மாதம் பேசவே இல்ல...’ -11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் ஜாக்குவார் தங்கம்!

‛‛அஜித் உடன் ஒரு மாதம் மனகசப்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு பின் பேச ஆரம்பித்தோம். அப்போது சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தனர். அவர்கள் அழைத்து எங்களை சமரசம் செய்ய முயன்றனர்’’

அஜித் ரசிகர்கள்-ஜாக்குவார் தங்கம் போர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவருக்கு சினிமாத்துறை சார்பில் வைக்கப்பட்ட பாராட்டு விழாவில், நடிகர் அஜித் பேசியதும், அதற்கு ரஜினி ஆதரவு கொடுத்ததும் இன்றும் பலருக்கும் நியாபகம் இருக்கும். ஆனால், அதே பேச்சை காரணம் காட்டி சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், அஜித்தை விமர்சித்ததும், அதற்கு எதிரொலியாக அஜித் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கம் வீட்டை உடைத்து சூறையாடியதும் நடந்தது. அது நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ஜாக்குவார் தங்கத்தை இணையத்தை ஒரு கை பார்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். சமீபத்தில் கூட, அஜித் ரசிகர்களால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக ஜாக்குவார் தங்கம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், அப்போது நடந்த என்ன என்பது குறித்து ஜாக்குவார் தங்கம் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி...

‛நஷ்டஈடு தரவான்னு அஜித் கேட்டாரு... ஒரு மாதம் பேசவே இல்ல...’ -11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் ஜாக்குவார் தங்கம்!

‛‛கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த போது, அஜித் தமிழை பற்றி ஒரு கருத்து பேசினார். அதனால் நான் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தேன். அதன் பின் அவரது ஆதரவாளர்கள் என் வீட்டை அடித்து உடைத்தனர். பின்னர் நடிகர் சங்கத்தில் வந்து நடந்த சம்பவத்திற்கு அஜித் வருத்தம் தெரிவித்தார். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார். நடந்த சம்பவத்திற்கும் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றார். சேதத்திற்கு நஷ்டஈடு தருகிறேன் என்றார். நான் தான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த காலகட்டத்தில் அந்த கருத்து காரசாரமாக இருந்தது. எனக்கு என தாய் மொழி மீது பற்று உள்ளது.

ரஷ்யாவில் குட்மார்னிங் என்று சொன்னால், பளார் என்று அடித்து விடுவார்கள். காரணம், தாய் மொழி மீது அங்கு அவ்வளவு பற்று. அவர்கள் மொழியில் தான் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். ஷாஜகானில் பைக் பைட் ஒன்று வைத்தேன். இந்தியாவிலேயே பைட் சீனுக்கு ஒன்மோர் கேட்டது அந்த சண்டைக்கு மட்டும் தான்.

விஜய் பெற்றோருடன் சென்று படம் பார்த்தோம். ஒன்ஸ்மோர் கேட்டார்கள். அந்த சண்டையை பார்த்து கன்னட படத்திற்கு ஒரே நாளில் அது போன்ற சண்டை காட்சி கேட்டனர். 5 லட்சம் தருவேன் என்றார்கள். எத்தனை கோடி கேட்டாலும் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டேன். கன்னடாவில் தமிழர்களை அடிப்பார்கள். அதனால் எனக்கு அங்கு தொழில் செய்து, சம்பாதிக்க விருப்பமில்லை. அந்த அளவிற்கு எனக்கு என் மொழி மீது பற்று உண்டு.

‛நஷ்டஈடு தரவான்னு அஜித் கேட்டாரு... ஒரு மாதம் பேசவே இல்ல...’ -11 ஆண்டு பஞ்சாயத்தை விளக்கும் ஜாக்குவார் தங்கம்!

அஜித் உடன் ஒரு மாதம் மனகசப்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு பின் பேச ஆரம்பித்தோம். அப்போது சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தனர். அவர்கள் அழைத்து எங்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அஜித் மனம் திறந்து பேசினார். எனக்கு சோறு போடுவது தமிழ் தான். நான் ஏன் தமிழை தவறாக பேசப்போகிறேன் என அஜித் கூறினார். அதுமட்டுமல்லால் சில பிரச்சனைகளுக்கு தன்னுடன் இருந்தவர்கள் தான் காரணம் என்றார். அவர்களும் மன்னிப்பு கேட்டனர். 

நிறைய நடிகர்கள் என்னுடன் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்னுடைய ஸ்டைலில் தான் நடிக்க விரும்புவர். விஜயசாந்தி, ராம்கி எல்லாம் நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உதவியாளர்களை வைத்தால் கூட, கட்டாயம் வர வேண்டும் என்று அன்பு கட்டளை போடுவார்கள். அதை தட்டமுடியாது,’’ என அந்த பேட்டியில் ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget