Indraja Sankar: “ஹேப்பி பர்த்டே சூரி மாமா..” : சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோபோ ஷங்கர் மகள்..
நடிகர் ரோபாே சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், சூரியை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்!
பாண்டியம்மாவாக மனதில் பதிந்த இந்து!
விஜய் டீவியின் கலக்கப் போவது யாரு ஷோவில் அறிமுகமாகி, மெல்ல ‘ஸ்டான்ட்-அப்’ காமெடியனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, இன்று முன்னனி நடிகர்களான அஜித், தனுஷ் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ரோபா சங்கர். இவரது செல்ல மகள் இந்திரஜா பிகில் படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். பாண்டியம்மா என்ற கேரக்டரில் அறிமுகமாகி, இவர் திரையில் தோன்றிய காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் ஆரவாரம். பிகில் படத்தின் ட்ரெயிலரில் “நானும் குண்டு எங்கம்மாவும் குண்டு.. பின்ன நான் மட்டும் எப்டி இருப்பேன்..” என இவர் எமோஷனலாக பேசிய டைலாக் படத்தில் இடம்பெறவில்லையே என பல பேர் குறைபட்டுக்கொண்டனர். படத்தில், நடிகர் விஜய்யின் கேரக்டரான பிகிலால் “குண்டம்மா குண்டம்மா” என உருவ கேலி செய்யப்பட்டாலும், வலுவான எமோஷனை வெளிப்படுத்தி அழுத்தமான கேரக்டராக மக்களின் மனதில் பதிந்து விட்டார்.
சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் அதிதி ஷங்கருக்கு தோழியாக நடித்தார் இந்திரஜா. படத்தில் சூரியுடன் சேர்ந்து இவர் அடித்த ரகளைகள் எல்லோருக்கும் பிடித்துப் போக, அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார். படத்தில் இவரது பர்ஃபாமன்ஸை பார்த்துவிட்டு பலரும் இவரை தன் படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் ‘லைன்’ கட்டி நிற்கிறது.
படங்களில் நடித்துக் கொண்டு பிசியாக உலா வந்தாலும், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ‘ஆக்டிவாக’ இருப்பார் இந்திரஜா. நடனம் என்றால் என்றால் இவருக்கு மிகவும் பிடித்தம். பல பாடல்களுக்கு தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நடனமாடி ரீல்ஸ் செய்வது இவரது ஹாபி. இவரது வீடியோக்களை பார்க்கும் பலர் இவரை உருவ கேலி செய்து கமண்ட் அடித்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்யும் சுபாவம் கொண்டவர் இவர்.
View this post on Instagram
சூரியை இடுப்பில் தூக்கி வைத்த இந்திரஜா
காமெடி நடிகர் சூரி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகை இந்திரஜாவும் தன் சார்பில் நடிகர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
நடிகர் சூரியை இடுப்பில் தூக்கி வைத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அவர், “ஹாப்பி பர்த்டே சூரி மாமா” என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சூரியின் கையிலேயே வளர்ந்து இன்று அவருடனேயே நடிக்கும் பாக்கியம் கிடைத்து மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.