Indian 2 Update: கமலின் இந்தியன் 2 படத்தில் இணையும் முன்னாள் கிரிக்கெட் பிரபலம்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங் உலக நாயகன் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய பிரபலம் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதனிடையே பஞ்சாபி நடிகரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவார். யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அந்த புகைப்படத்தில், "கேமராவிற்கு பின் உழைக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மிக ஸ்மார்ட்டாக மாற்றிய மேக்கப் மேனுக்கு நன்றி. லெஜெண்ட் கமலுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க பஞ்சாப் சிங்கம் தயார்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படமாக 1996ல் வெளியான திரைப்படமான "இந்தியன்" திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் உள்ளது.
2019ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு சில பல பிரச்சினைகளால் பாதியிலேயே முடங்கிப்போனது. அதனை தொடர்ந்து பட்ஜெட் பிரச்சினை மற்றும் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தொடரமுடியாமல் நின்றுபோனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
மும்முரமாக நடைபெறும் இந்தியன் 2 :
தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 2023ம் மத்தியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். படப்பிடிப்பு முடிவடைந்த உடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வழக்கம் போல் இயக்குநர் ஷங்கரின் படங்கள் என்றாலே ஏராளமான விஷூவல் எஃபெக்ட்ஸ் இருக்கும்.
இருப்பினும் எந்திரன், 2.0 போன்ற படங்களில் இருந்த VFX போல மிக அதிகமான அளவில் இப்படத்தில் இருக்காது என்றும் சில அதிரடி காட்சிகள் மற்றும் பாடல்களில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்க்கப்ட்டுள்ளன எனக் கூப்படுகிறது. மிகவும் மும்முரமாக பணிகள் நடைபெறுவதால் அநேகமாக இப்படம் தீபாவளி 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தியன் 2 படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் பான் இந்திய படமாக வெளியாகும். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஷங்கர் - லைகா நிறுவனம் - கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு மேஜிக்கை திரையில் கொண்டுவரும் என மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளனர் ரசிகர்கள்.