Shruthi Nakul : "மனைவி அம்மாவாகவோ, கணவர் அப்பாவாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை": என்ன சொன்னார் நகுல் மனைவி?
மனைவி அம்மாவாகவோ, கணவர் அப்பாவாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு குடும்பத்தின் வரவு செலவுகளை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது அந்த ஜோடி முடிவெடுக்க வேண்டியது. அதில் ஆண் பெண் வேறுபாடுகள் தேவையில்லை.
![Shruthi Nakul : If you wants to be tied up thaali let your husband to be tied up Nakul wife Shruti gets triggered in live Shruthi Nakul :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/04/0857970861c731b0808dfc9b610e0710_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் கடந்த 2020ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாட்டர் பர்த் முறையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்ருதி. அந்த குழந்தைக்கு அகிரா என பெயரிட்டனர். இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வரும் ஜூனில் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் நகுலுக்கும் ஸ்ருதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் அவர் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவில், அவரிடம் சில பெண்கள் கேள்வி கேட்டனர். அதில் தனது கணவர் தாலி போட்டுக்கொள்ள நிர்பந்திக்கிறார் நான் என்ன செய்வது என்று கேட்ட கேள்விக்கு, "தாலி கட்டுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், கணவர் மனைவியை வற்புறுத்த இயலாது. அப்படி கட்டியே ஆகவேண்டும் என்றால் அவரை கட்டிக்கொள்ள சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
பின்னர் ஒருவர், என் குடும்பத்தை நிர்வகிக்க, தன் கணவருக்கு ஒரு அம்மாவாக நான் இருந்து செயல்படலாமா என்று கேட்டார். அதற்கு, "அது ஒரு வியூகமாக கூறப்படுவது, மனைவி அம்மாவாகவோ, கணவர் அப்பாவாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குடும்பத்தின் வரவு செலவுகளை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது அந்த ஜோடி முடிவெடுக்க வேண்டியது. அதில் ஆண் பெண் வேறுபாடுகள் தேவையில்லை. குடும்பத்தில் தனியாக ஒரு முடிவு எடுக்கவே முடியாது, இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்த பிறகே எடுக்க முடியும். அப்படி இருந்தால்தான் வாழ்க்கை பேலன்ஸ் ஆகும்." என்று அவசியமான பாடம் எடுத்தார்.
View this post on Instagram
நடிகை தேவையானியின் இளைய சகோதரரான நகுல், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் பருமானாக இருந்த நகுல், தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தொடர்ந்து கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வாஸ்கோடகமா என்ற படத்தில் நடித்து வருகிறார் நகுல். நடிகர் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். எதிர் காலத்தில் 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நகுல் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)