மேலும் அறிய

யாரும் எதிர்பார்க்கல! முண்டியடிக்கும் ரசிகர்கள்.. சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் IDENTITY!

மலையாளத்தில் வெளியாகியுள்ள மிகச்சிறந்த திரில்லர் படங்களின் வரிசையில் இணைந்துள்ள IDENTITY திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பை தொடர்ந்து கூடுதல் காட்சிகள் கிடைத்துள்ளன.

சமீபத்தில் வெளியான ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடித்துள்ள "IDENTITY" படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கத்தில் டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோர் நடித்து இருக்கும் படம் தான் IDENTITY.

IDENTITY படத்திற்கு கிடைத்த மாஸ் வரவேற்பு:

இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், படம் ஜனவரி 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் IDENTITY படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியாகும் மிகச்சிறந்த திரில்லர் படங்களின் வரிசையில் தற்போது IDENTITY படமும் இணைந்துள்ளது. காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் சிறந்த படமாக அமைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் படத்தை பற்றிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ஃபாரென்சிக் படத்திற்குப் பிறகு டோவினோ தாமஸ், இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் கூட்டணி மீண்டும் வெற்றி அடைந்துள்ளது.

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர்:

ராகம் மூவிஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் மூலம் சி.ஜே.ராய் IDENTITY படத்தை தயாரித்துள்ளனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் த்ரிஷா முதன்முறையாக டோவினோ தாமஸ் உடன் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். IDENTITY படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது, மேலும் படம் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரில் திரையரங்குகளில் வரவுள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

IDENTITY படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் இணைந்து இயக்க, அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவும், சமன் சாக்கோ படத்தொகுப்பும் செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

IDENTITY படம் தமிழ் மற்றும் மலையாளம் என  இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. முதல் நாளில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் தற்போது தமிழகத்தில் 40 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
Embed widget