மேலும் அறிய

நிறைய பிரச்சனைகளை சந்திச்சேன்.. சினிமா சீக்ரெட்ஸ் சொன்ன கார்த்திக்..

"எங்கு தாமதமாக சென்றாலும், 'ஏன் லேட்?' என்று கேட்டால் என் திரைப்பட வாழ்வில் எனக்கு தந்த முதல் வசனம் 'ஏன் லேட்?'தான். அதனால தான் எல்லாமே லேட் ஆகுது, அதற்கு நான் காரணம் இல்லை, என் இயக்குனர்தான் காரணம்."

தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த அமலா, ரேவதி, ராதா, ராதிகா போன்ற ஹீரோயின்களையும், ஜனகராஜ், நெப்போலியன், பாண்டியன், சந்திரசேகர், கார்த்திக் போன்ற பல நடிகர்களையும் சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

அதில் கர்த்திக்கையும் ராதாவையும் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். கார்த்திக் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.1981 இல் ஆரம்பித்த கார்த்திக்கின் திரைப்பயணம் 40 வருடம் தாண்டியும் தொடர்கிறது. இந்த திரைப்படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதையும், ராதா கார்த்திக் ஒருவரை ஒருவர் சந்தித்ததையும் மிகவும் ஸ்வாரஸ்யமாக ஒரு மேடையில் கூறியுள்ளனர்.

நிறைய பிரச்சனைகளை சந்திச்சேன்.. சினிமா சீக்ரெட்ஸ் சொன்ன கார்த்திக்..

இருவரும் மேடையில் நிற்க கார்த்திக் பேசுகிறார், "என்னுடைய குரு பாரதி ராஜா என்னை கூப்பிட்டு, நீ இன்னும் ஹீரோயின பாக்கலையே, வா காட்றேன்னு கூட்டிட்டு போனார். நானும் போனேன், அங்க ஒரு ரூம்ல காத்திருந்தோம். ஒரு சிலை மாதிரி வந்து நின்னாங்க. அவங்க புத்தம் புது காலை பாடலுக்கு கொடுத்த பாவங்கள் அப்படி இருந்துச்சு. இதுவரைக்கும் கேமராவே பார்த்தது இல்ல, கேமரா முன்னாடி நடிச்சது இல்ல ஆனா அவ்வளவு நல்ல பாவனைகள கொண்டு வந்தாங்க, நான் ஆச்சர்யபட்டு போய்ட்டேன்." என்று கூற, ராதா, "ரொம்ப நன்றி, அப்போ எனக்கு தமிழ் சுத்தமா பேச வராது. இப்போவும் பெருசா வராது, அதுல எனக்கு பெரிய பயம். முதல் படம் வாய்ப்பு போய்டுமோன்னு. ஆனா நான் கார்த்திக் சாரை பார்த்தேன், ஒரு மாதிரியா தமிழ் பேசிட்டு இருந்தார். பெரும்பாலும் இங்கிலீஷ் பேசினார். அப்போதான் நிம்மதி ஆனேன், கம்பெனிக்கு ஒரு ஆள் இருக்காருன்னு. அப்போ எங்களுக்கு முதல் வசனம், 'ஏன் லேட்?' ன்னு கேக்கணும். அவர் 'கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு'ன்னு சொல்லுவாரு." என்று கூறினார்.

நிறைய பிரச்சனைகளை சந்திச்சேன்.. சினிமா சீக்ரெட்ஸ் சொன்ன கார்த்திக்..

அவரை இடைமறித்து பேசிய கார்த்திக், "அதனாலதான், நான் எந்த இயக்குனரை பார்க்க சென்றாலும் தாமதமாக சென்றால், 'ஏன் லேட்?' என்று கேட்டால் என் திரைப்பட வாழ்வில் எனக்கு தந்த முதல் வசனம் 'ஏன் லேட்?' தான். அதனால தான் எல்லாமே லேட் ஆகுது, அதற்கு நான் காரணம் இல்லை, என் இயக்குனர்தான் காரணம் என்று கூறுவேன். என் அப்பா சொல்வார், யாருக்கு டேட் கொடுத்திருந்தாலும் ஸ்ரீதர் சார் கூப்பிட்டால் சென்று விடுவேன் என்று, நான் டைரக்டர் (பாரதிராஜா) கூப்பிட்டா போய்விடுவேன். அதனால் நான் நிறைய பிரச்சனைகளும் சந்திச்சிருக்கேன், அது அவருக்கும் தெரியும். இங்கு ரஜினி சார், கமல் சார், இவ்வளவு நடிகர்கள் இருக்கிறோம் என்றால் காரணம் இயக்குநர்கள். இயக்குநர்கள் கடவுள்கள். அவர்கள் படைப்புகள் அற்புதமானது. ஒவ்வொருவரும் குரு, ஒவ்வொரு படமும் பாடம்." என்று பேசி முடித்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
Embed widget