"நான் குற்றவாளி இல்லை… பாதிக்கப்பட்டவள்…", ரூ.200 கோடி மோசடி வழக்கு… அப்ரூவராக மாறுகிறாரா நோரா ஃபதேஹி!
"ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்த நோரா தன்னைத் தானே அவர்களிடம் இருந்து துண்டித்துக் கொண்டார். இந்த வழக்கில் நோரா ஃபதேஹி சாட்சியாக மாற வாய்ப்புள்ளது, ஆனால் விசாரணை மேலும் நடைபெறும்"
₹200 கோடி பணமோசடி வழக்கு தொடர்பாக ஃபதேஹி மந்திர் மார்க் தலைமையகத்தில் 6 மணிநேரம் விசாரிக்கப்பட்டார். பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரை சுகேஷுக்கு அறிமுகப்படுத்திய பிங்கி இரானியையும் EOW விசாரித்தது.
சுகேஷ் சந்திரசேகர்
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறைக்கு சென்றார். சுகேஷ் சந்திரசேகர் அப்போது சிறையில் இருந்த போது இரு தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் அந்த தொழில் அதிபரில் ஒருவர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் நோரா ஃபதேஹி பெயரையும் இணைத்துள்ளது.
நோரா ஃபதேஹி
பாலிவுட் நடிகரான நோரா ஃபதேஹியிடம் இந்த மாத தொடக்கத்தில் இந்த வழக்கில் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஏஜென்சியால் விசாரிக்கப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ED இன் படி, நோரா ஃபதேஹி மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் சந்திரசேகரிடமிருந்து சொகுசு கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை மோசடியின் மூலம் வந்த வருமானத்திலிருந்து பெற்றுள்ளனர் என்று தெரியவந்தது. அதே போல மீண்டும் நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் அதிகாரிகள் முன்னிலையில் தான் சதி செய்தவர் அல்ல 'சதியில் பாதிக்கப்பட்டவர்' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வந்தது…
தமிழ்நாட்டின் "தொண்டு நிறுவன" நிகழ்விற்கு அவர் வந்ததை விவரித்தார், எக்ஸீட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் விளம்பரதாரரான அஃப்சர் ஜைதி தன்னை அழைத்ததாகவும், இந்த நிகழ்வை சூப்பர் கார் ஆர்டிஸ்ட்ரி ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். அவரது பயணம் மற்றும் இதர செலவுகளுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர் நெயில் ஆர்டிஸ்ட்ரிக்கு நிறுவனத்தின் நிறுவனர் லீனா பால் பெயரை கூறியுள்ளார்.
பெற்றுக்கொண்ட பரிசுகள்
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் கொடுத்ததையும் நோரா மறுத்தார். "அன்பு மற்றும் பெருந்தன்மையின் அடையாளமாக" தனக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாகவும், முதலில் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார். ஒரு நிகழ்வில் லீனா தன்னைச் சந்தித்து ஒரு குக்கி (Gucci) பிராண்ட் பை மற்றும் ஐபோனை பரிசளித்ததாகவும், நோராவின் "பெரிய ரசிகை" என்று லீனா கூறியதாகவும் கூறினார். அப்போது தான் தனக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளிக்கப்பட்டது தெரிய வந்தது என்றார். ANI-யிடம் பேசிய சிறப்புக் காவல் ஆணையர் (EOW) ரவீந்தர் யாதவ், “சுகேஷின் குற்றப் பின்னணிகள் தெரிந்த பிறகும் ஜாக்குலின் அவருடனான உறவை முறித்துக் கொள்ளாததால் அவருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்த நோரா தன்னைத் தானே அவர்களிடம் இருந்து துண்டித்துக் கொண்டார். இந்த வழக்கில் நோரா ஃபதேஹி சாட்சியாக மாற வாய்ப்புள்ளது, ஆனால் விசாரணை மேலும் நடைபெறும்", என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்