Vikram Vedha Budget: தமிழைவிட 15 மடங்குக்கும் மேல் செலவு... எகிறிய ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட்.. காரணம் இதுதான்..
தமிழில் 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியில் உச்சகட்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாகவும், படத்தில் பட்ஜெட் எதிர்ப்பார்த்ததை விட கைமீறி போய் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’.
இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான், நடிப்பில் அதே பெயரில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகி வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், தமிழில் 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியில் உச்சகட்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாகவும், படத்தில் பட்ஜெட் எதிர்ப்பார்த்ததை விட கைமீறி போய் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹ்ரித்திக்கின் திரையுலக வாழ்வில் ஹை பட்ஜெட் படமாக முன்னதாக ஹ்ரித்திக் நடித்த ’வார்’ படம் 158 கோடி பட்ஜெட்டில் தயாரானது. இந்நிலையில், விக்ரம் வேதா ரீமேக் அந்த ரெக்கார்டை முறியடித்து 175 கோடிகள் செலவில் தயாராகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் படமாக்கப்பட வேண்டிய இப்படம் ஹ்ரித்திக் கொடுத்த அழுத்தத்தால் துபாயில் செட் அமைப்பட்டு படமாக்கப்பட்டதாகவும், இதனால் தான் படத்தின் செலவு எக்கச்சக்கமாக எகிறியதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் 11 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 60 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.