(Source: ECI/ABP News/ABP Majha)
H.vinoth interview: ‛ரேஸர் அஜித்... ஏன் கீழே விழுந்தார்...’ -வலிமை விபத்து குறித்து ஹெச்.வினோத் ஓப்பன் டாக்!
படத்தில் சேஸிங் சீன்களை எடுப்பதுதான் மிக கடினமாக இருந்தது. அதனால் ஒவ்வொரு சீனையும் மிகவும் கவனமாக எடுத்தோம்.
ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வலிமைப்படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பைக் ஸ்டண்ட் சம்ந்தமான காட்சிகள், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்துப்பட்டது, அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்து பின்னர் மீண்டும் எழுந்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஸ்டண்ட் செய்யும் போது அஜித் ஏன் விழுந்தார் என்பது குறித்து படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் பேசியுள்ளார்.
அதில் அவர் பேசும் போது, “ படத்தில் சேஸிங் சீன்களை எடுப்பதுதான் மிக கடினம். அதனால் ஒவ்வொரு சீனையும் மிகவும் கவனமாக எடுத்தோம். சேஸிங் சீன்களை எடுக்க சோலாபூர், ஹைதாராபாத், பூனே அருகே உள்ள லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் முயற்சி செய்தோம். ஆனால் எந்த இடத்திலும் எங்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை. கடைசியாக சென்னை அருகே உள்ள மிஞ்சூர் பகுதியில் படமாக்க அனுமதி கிடைத்தது.
அங்குதான் சேஸிங் காட்சிகளை படமாக்கினோம். அந்த சாலை மணல் நிறைந்த சாலையாக முடிக்கப்படாமல் இருந்தது. அதனால்தான் அங்கு அஜித்திற்கு விபத்து ஏற்பட்டது. அஜித்திற்கு எந்த அளவு பாதுகாப்பை கொடுத்தோமோ அதே அளவு அவர் உபயோகப்படுத்திய பைக்குக்கும் அதே அளவு பாதுகாப்பை கொடுத்தோம். அஜித் ஓட்டிய பைக் இத்தாலியில் இருந்து பிரேத்யமாக கொண்டு வரப்பட்டது. ( Brutale (MV Agusta Brutale)
அந்த பைக்கிற்கு அந்த அளவு பாதுகாப்பு கொடுக்க காரணம் என்னவென்றால், அந்த பைக்கின் இண்டிகேட்டர் உடைந்தால் கூட, 30,000 ரூபாய் வரை செலவாகும். முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்றில் ஹெச். வினோத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரேஸர் ஒருவர் நேரடியாக எஸ்.ஐ ஆக நியமிக்கப்பட்டார். அதனை தழுவி படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்