மேலும் அறிய

Raayan: ஒரு வார்த்தையில் ராயன் படம்...ஏ.பி.பி நாடு நடத்திய கருத்துக்கேட்பு முடிவுகள்

தனுஷின் ராயன் படம் சூப்பரா ? சுமாரா ? ஒருமுறை பார்க்கலாமா ? ஏ.பி.பி நாடு நடத்திய எக்ஸ் கருத்துக் கேட்பில் ரசிகர்களிம் முடிவுகளைப் பார்க்கலாம்

ராயன்

தனுஷின் 50வது படமாக உருவாகி இருக்கும் ராயன் (Raayan) படம் இன்று  ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகி இருக்கிறது. காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏபிபி நாடு எக்ஸ் தளத்தில்  நடத்திய கருத்துக் கேட்பில் ராயன் படத்திற்கு ரசிகர்கள் வழங்கியிருக்கும் விமர்சனம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ராயன் கதை

காத்தவராயன் (தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் ( தனுஷ்) தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்.

மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ். இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா. ஒருவேளை ராயன்  உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்‌ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை...

 

ராயன் படம் சூப்பர் என்று 52.1 சதவீதம் ரசிகர்கள் வாக்களித்துள்ளார்கள்.

ஒருமுறைப் பார்க்கலாம்

18.4 சதவீதம் ரசிகர்கள் ராயன் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்கிற கருத்திற்கு வாக்களித்துள்ளார்கள்

நல்லா இல்லை

13.5 சதவீதம் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என்கிற கருத்திற்கு வாக்களித்துள்ளார்கள்

கருத்து தெரிவிக்க விருப்பமில்லை

16 சதவீதம் ரசிகர்கள் படம் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

இந்த முடிவுகள் எக்ஸ் தளத்தில் பதிவான தகவல்களின் அடிப்படையிலானவை. மேலும் இந்த முடிவுகள் ஜூலை 26 காலை முதல் மாலை வரையிலான முடிவுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்யப் படும். 


மேலும் படிக்க : Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!

Deadpool & Wolverine Review: அட என்னப்பா இப்படி பண்றாங்க! டெட்பூல் & வோல்வரின் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manaadu | மாநாடு-க்கு திணறும் விஜய்..போலீஸ் கேட்ட 21 கேள்விகள்..அனுமதி இல்லையா?Mahavishnu Arrested | AIRPORT வந்த மகாவிஷ்ணு..தட்டி தூக்கிய போலீஸ்..நிலவரம் என்ன?Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
"உங்களுக்கு கடவுள் தந்த தண்டனை" வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தோல்வி குறித்து பிரிஜ் பூஷன் பரபர!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
Embed widget