(Source: ECI/ABP News/ABP Majha)
Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWIST
நடிகர் நிவின் பாலி மற்றும் 4 பேர் சேர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நாளில் அவர் தன்னுடன் படப்பிடிப்பில் இருந்ததாக இயக்குனர் வினீத் சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஹேமா கமிட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பான சம்பவங்களை வெளிப்படையாக சொல்லி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் நிவின் பாலி மீதுப் பெண் ஒருவர் பகீர் புகாரை அளித்துள்ளார். கடந்த ஆண்டு துபாய்க்கு சென்ற போது ஸ்ரீயா என்ற பெண் மூலம் நிவின் பாலி பழக்கம் கிடைத்ததாகவும், பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிவின் பாலி, ’நான் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவறான செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். இதில் சம்பந்தப்பட்டவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். சட்டரீதியாக சந்திப்பேன்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் நிவின் துபாயில் குற்றம் புரிந்ததாக சொல்லப்படும் அந்த நாளில் நிவின் பாலி தங்களுடன் இருந்ததாக இயக்குனர் வினீத் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாலியல் குற்றம் நடந்ததாக சம்பந்தப்பட்ட பெண் சொல்லும் டிசம்பர்14, 15 தேதிகளில் நிவின் பாலி கொச்சியில் எங்களுடன் தான் இருந்தார், வருஷங்களுக்கு ஷேஷம் படப்பிடிப்பு அப்போது தான் நடந்தது. இதனை சரிப்பார்க்க வேண்டுமென்றால், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் நிவின் பாலியின் பெயரில் அறை புக் ஆகியிருக்கும் அதே போல கொச்சியில் தான் நாங்கள் பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். அதனால் நிவின் பாலி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வீனித் சீனிவாசன் நிவின் பாலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.