TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு?
TVK First Party Conference : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மாநாட்டுக்கு அனுமதி?
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரியதாக தகவல் வெளியானது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு 23 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநாடு நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து 21 கேள்விகள் கேட்கப்பட்டு நோட்டீஸ் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்து வழங்கினார்.
விஜய் மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டி எஸ் பி அலுவலகத்தில் , நேற்று தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர்.
நாளை அறிவிப்பு.?
இந்நிலையில், தமிழக வெற்றிக கழகத்தின் மாநாட்டு தேதியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை காலை சுமார் 11 மணியளவில் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமாக நடைபெறும் இடம் குறித்து தகவலையும் தெரிவிப்பார் என்ற தகவலையும் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வமான சின்னம் பொருந்திய கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்https://t.co/5UCDeCNoq3
— TVK Vijay (@tvkvijayhq) August 22, 2024
நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
தமிழ்நாடு இனி சிறக்கும்.
வெற்றி நிச்சயம்.#TVKFlagAnthem#ThalaivarVijay pic.twitter.com/G6eredAidl
மேலும் அதே நிகழ்ச்சியில் கட்சியின் சின்னம், கொடியை பற்றியும் விரிவான விளக்கத்தை மாநாட்டில் தெரிவிக்கிறேன் என நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: போடு வெடிய.. விஜய் கட்சிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் தவெக!