Watch Video: சர்வதேச திரைப்படவிழாவில் கெத்து காட்டிய விக்ரம் ;127வது நாளிலும் ஹவுஸ் ஃபுல் ஷோ..!
Watch Video: சர்வதேச திரைப்பட விழாவில் அரங்கம் நிறைந்த ஹவுஸ் ஃபுல் ஷோவினால் விக்ரம் திரைப்படம் கெத்து காட்டியுள்ளது.
Watch Video: நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியாகி மிகப்பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த விக்ரம் படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேலான வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது.
House full for #Vikram at the Busan International Film Festival!@RKFI @ikamalhaasan @Dir_Lokesh Yet another feather in your cap ❤️🤗🥰#VikramatBIFF#BusanInternationalFilmFestival pic.twitter.com/Lpl6xuYt9y
— Priyannth RS (@Priyannth) October 7, 2022
இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது ’விக்ரம்’ திரைப்படம். மகத்தான வெற்றிபெற்ற இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், பிரபல சர்வதேச திரைப்பட விழாவான 27 வது பூஸான் திரைப்பட விழாவில் திரையிடப்பட விக்ரம் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது குறித்து ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.
அக்டோபர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படவிருந்தது. அதில் இன்று அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரைப்படம் திரையிடப்பட்டது.
வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்பட்டது.
View this post on Instagram
திரைப்படம் வெளியாகி இன்றுடன் 127வது நாள் ஆன நிலையிலும் படத்தின் திரையிடலின் போது அரங்கமே நிறைந்த காட்சியாக இருந்துள்ளது. இதனை படம் பார்க்கச் சென்ற ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கமான டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். இதனை விக்ரம் படத்தின் தீவிர ரசிகர்களும், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களும் அதனை மிகவும் அதிகமாக பகிர்ந்து வருகின்றன. ஓபன் சினிமா பிரிவில் திரையிடப்பட்டுள்ள விக்ரம் திரைப்படத்தின் அரங்கம் நிறைந்த காட்சியின் தகவல் அறிந்து விக்ரம் திரைப்படத்தின் படக்குழுவும் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.