Saalar Movie: ஆக.15ல் வெளியாகிறது சலார் படத்தின் முக்கிய அப்டேட்!
பான் இந்திய நட்சத்திர நாயகன் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் புது அறிவிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
![Saalar Movie: ஆக.15ல் வெளியாகிறது சலார் படத்தின் முக்கிய அப்டேட்! Hombale films tweets saalar movie big announcement will be out on august 15 Saalar Movie: ஆக.15ல் வெளியாகிறது சலார் படத்தின் முக்கிய அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/13/33683ec2941e0ced39902b6d18163de51660386857458102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் அப்டேட் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மதியம் 12:58 மணிக்கு வெளியாகவுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி கூட்டணியின் தயாரிப்பில் சலார் படம் 2023-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
𝐆𝐞𝐭 𝐫𝐞𝐚𝐝𝐲 𝐟𝐨𝐫 #𝐒𝐚𝐥𝐚𝐚𝐫. 𝐒𝐭𝐚𝐲 𝐓𝐮𝐧𝐞𝐝.#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @IamJagguBhai @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @SalaarTheSaga pic.twitter.com/m7GFPsGo0D
— Hombale Films (@hombalefilms) August 13, 2022
படத்தின் டீசர் மே மாதத்தில் வெளியாகும் என அறிவிப்பு முன்னரே வந்தது ஆனால், அப்போது எந்தவொரு அப்டேட்டும் வராத நிலையில், இம்முறை டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
View this post on Instagram
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் பிரபாஸ். இப்படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக கமல் மகள் ஷ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். அதுமட்டுமில்லாமல், மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறனும் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நாயகன் ஏற்கனவே பாகுபலியில் நடித்து தன்னை ஒரு பான் இந்திய ஸ்டார் என்று நிரூபித்தார். உலகமே, பாகுபலி படத்தை வியந்து பார்த்தது. கட்டப்பாவை யார் கொன்றது என்ற கேள்வியுடன் பலரும் இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்திருந்தனர். மக்களின் எதிர்ப்பார்பை, பாகுபலியின் இரண்டாம் பாகம் பூர்த்தி செய்தது.
நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு முன் பல படங்கள் நடித்திருந்தாலும், இப்படத்திற்கு பின்பே புகழின் உச்சியை எட்டினார்.மாஸான ஹீரோ ஒருபக்கம் இருந்தாலும் இப்படத்தை இயக்குபவர் தரமான சம்பவத்தை நிகழ்த்தியவர் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஹீரோக்களுக்கு பில்ட்-அப் செய்தால் எரிச்சல்தான் வரும் ஆனால், இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கும் நாயகர்களுக்கு எவ்வளவு பில்ட்-அப் கொடுத்தாலும் ஏற்கும் வகையில்தான் அமையும்.
1000 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டி கன்னடா சினிமாவின் புகழை பரப்பியவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாலே ஃப்லிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)