Avatar 2 Release Date: அவதார் 2 அப்டேட் - வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
அவதார் படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். ஏலியன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
சராசரி உலகத்துக்குள் புதிய உலகம் ஒன்றை கொண்டுவந்ததால் அவதார் படமானது சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
#Hollywood is getting ready for 2022..#AVATAR2 will be a great finale on Dec 16th.. pic.twitter.com/ujGDueyVxy
— Ramesh Bala (@rameshlaus) January 11, 2022
இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The biggest movie in the world #AVATAR2 confirms a Dec 16, 2022 release! pic.twitter.com/WlYxm22aNU
— Sreedhar Pillai (@sri50) January 12, 2022
மேலும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவதார் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajendra Balaji Granted Bail | ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு.. நிபந்தனைகள் என்னென்ன?