Trisha: 22 ஆண்டுகள் சினிமா பயணம்.. நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?
சென்னையை சேர்ந்த திரிஷா 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் ஒரு காட்சியில் நடித்து திரையுலகில் எண்ட்ரீ கொடுத்தார்.
நடிகை திரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை காணலாம்.
சென்னையை சேர்ந்த திரிஷா 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் ஒரு காட்சியில் நடித்து திரையுலகில் எண்ட்ரீ கொடுத்தார். அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்கள் வெளியாகி அவருக்கு ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம்,சூர்யா, கார்த்தி, சிலம்பரசன், ஜெயம் ரவி, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி அத்தனை ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
Wishing the ever-charming actress @trishtrashers a very happy birthday!#HBDTrisha #HappyBirthdayTrisha pic.twitter.com/AOv13QpE47
— Sun Pictures (@sunpictures) May 4, 2024
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் திரிஷாவுக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். 41வது பிறந்தநாளை திரிஷா இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இன்றளவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் அவருக்கு நிச்சயதார்த்தம் வரை சென்று நின்ற நிகழ்வெல்லாம் வாழ்க்கையில் நடந்துள்ளது.
இந்த வயதிலும் தனது வசீகர அழகால் ரசிகர்களை கொள்ளைக் கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக அஜித்தின் விடா முயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே திரிஷாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
@trishtrashers 🥵❤️🤌#HBDTrisha pic.twitter.com/VdGBV7lirn
— Sowmi Honey 🍯 (@sowmiya_vj) May 4, 2024
இவர் தற்போது ரூ.5 கோடி சம்பளம் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட ஆண்டுக்கு ரூ.9 கோடி வரை விளம்பரங்கள், சினிமா படங்கள் மூலம் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் திரிஷாவுக்கு சென்னையிலும், ஆந்திராவிலும் சொந்தமாக வீடு உள்ளதாகவும், ரேஞ்ச் ரோவர், மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிஎள்யூ ஆகிய கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக திரிஷாவிடம் ரூ.85 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் படிக்க: HBD Trisha: “அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று!