HBD Arul Saravanan: விளம்பரங்களின் ட்ரெண்டை உடைத்த ‘தி லெஜண்ட்’ ... நடிகர் அருள் சரவணன் பிறந்தநாள் இன்று..!
பொதுமக்களிடையே பிரபலமாக திகழும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர், நடிகர், தயாரிப்பாளர் அருள் சரவணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பொதுமக்களிடையே பிரபலமாக திகழும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர், நடிகர், தயாரிப்பாளர் அருள் சரவணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ட்ரெண்டை மாற்றிய அருள் சரவணன்
பொதுவாக ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பொருட்கள், நகைகள் விற்பனை செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் விளம்பரம் இல்லாமல் வியாபாரம் செய்வது கிடையாது. அப்படியான விளம்பரங்கள் அன்றைய சந்தையில் மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூ வைத்திருக்கும் பிரபலங்களை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இந்த ட்ரெண்டை உடைத்தவர் அருள் சரவணன் தான். பலருக்கும் அந்த நிறுவனங்களின் ஓனர்கள் பற்றி துளியும் தெரியாமல் இருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார் அருள் சரவணன்.
முதலில் இந்த விளம்பரத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எந்த பண்டிகை என்றாலும் அதில் லெஜண்ட் இல்லாத விளம்பரங்களே இல்லை என்னும் அளவுக்கு நடித்தார். அவரைப் பார்த்தே மற்ற நிறுவனங்களின் உரிமையாளர்களும் விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர். வசீகரமான முகம் இல்லை என்றாலும், அவரின் தன்னம்பிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
சினிமாவில் எண்ட்ரீ
விளம்பரம் மூலம் மக்களிடையே பரீட்சையமான நிலையில், அடுத்த அடியாக சினிமாவுக்குள் நுழைந்தார். நயன்தாராவுடன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனை சினிமா உலகைச் சேர்ந்தவர்களே விமர்சித்தனர். எதையும் கண்டு கொள்ளவில்லை. அருள் சரவணன் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பும் வெளியானது. தமிழில் சில படங்களையும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் அந்த படத்தை இயக்கினார்கள். ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை, விவேக், பிரபு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க படம் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி படுதோல்வி அடைந்தது.
ஆனாலும் மனம் தளராமல் அடுத்தப்படத்திற்காக கதைகளை கேட்டு வருகிறார். கிட்டதட்ட 40 வயதுக்கு மேல் தான் வெளியுலகில் தன்னை அடையாளம் காட்டினார். தி லெஜண்ட் படத்தில் சில நாட்கள் தான் நடிகர் விவேக் நடித்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது இறுதிச்சடங்கிற்கான அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். நிஜத்திலும் எளிமையான மனிதராக வலம் வரும் அருண் சரவணன் என்றும் வாடிக்கையாளர் மத்தியில் ‘தி லெஜண்ட்’ தான். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!