Lubber Pandhu 3rd Single: டம்மா கோலி கொப்பன் காலி... கானா பிரியர்களுக்கு விருந்தாக வெளியான 'லப்பர் பந்து' மூன்றாவது பாடல்
Lubber Pandhu 3rd single : ஹரிஷ் கல்யாண் - தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'லப்பர் பந்து' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அவர் அறிமுகமான 'சிந்து சமவெளி' திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் பிக் பாஸ் போட்டியாளராக அவர் என்ட்ரி கொடுத்த பிறகு அவரின் திரை பயணமே முற்றிலுமாக மாறிப்போனது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த உடனே அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ரன் பேபி ரன், சர்தார், காரி உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிக்க அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அட்டகத்தி தினேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலா சரவணன், தேவதர்ஷினி, ஸ்வாசிகா விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் 'லப்பர் பந்து' படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே சின்னஞ்சிறுக்கிளியே மற்றும் ஆச உறவே பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மோகன் ராஜா பாடல் வரிகளை எழுத கானா சேட்டு பாடியுள்ள 'டம்மா கோலி' பாடல் இன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Here’s #DammaGoli, a fun song sure to connect with the boys about the rivalry in the game of cricket 🏏
— Only Kollywood (@OnlyKollywood) September 10, 2024
▶️ https://t.co/bjQLnXvZsc
An @RSeanRoldan musical.
Catch #LubberPandhu comes to theatres on the 20th of September!
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia.… pic.twitter.com/ndPhCWIz2I
இப்படம் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான 'பார்க்கிங்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஹரிஷ் கல்யாண் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றது.