மேலும் அறிய

Actress Hansika Marriage: ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார்?

Actress Hansika Marriage:தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஹன்சிகா மோத்வானி:

2011ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரியான நடிகை ஹன்சிகா. இவர் நடித்த முதல் படம் எங்கேயும் காதல் என்றாலும், மாப்பிள்ளை படம் முதலில் வெளியானதால், அப்படம் மூலமாகவே அனைவராலும் அறியப்பட்டார். முதல் இரண்டு படங்களிலேயே, தனுஷ் மற்றும் ஜெயம் ரவி என முன்னனி நடிகர்களுடன் நடித்ததாலும், பப்ளி ஹீரோயினாக இருந்ததாலும் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த மான் கராத்தே திரைப்படம் மெகா-ஹிட் அடித்தது. இந்த பட ரிலீஸையடுத்து, ரசிகர்கள் மத்தியில் ‘யாழினி’யாகவும் பிரபலமானார். 

View this post on Instagram
 
A post shared by Hansika Motwani (@ihansika)

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர், முதன் முதலாக நடித்தது, 90’ஸ் குழந்தைகளுக்கு பிடித்த “ஷகலக்க பூம்பூம்” என்ற டெலிவிஷன் தொடரில்தான். இதில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், பருவ வயதையடைந்தவுடன் தமிழ், தெலுங்கு, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டார். எந்தெந்த மொழி படங்களில் இவர் நடித்திருந்தாரோ, அத்தனை மொழிகளிலும் இவருக்கு ரசிகர்களும் பெரிய அளவில் உள்ளனர். சுந்தர் சி, சூரஜ், விஜய் சந்தர் என பல இயக்குனர்களுடனுடம் கை கோர்த்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஹன்சிகா. 

Actress Hansika Marriage: ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார்?

டிசம்பரில் திருமணமா?

ஹன்சிகாவிற்கு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள முண்டாடோ கோட்டை,அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இத்தகவலை ஹன்சிகா தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. “ஹன்சிகாவிற்கு திருமணம்” என தகவல் பரவுவது இது முதல் முறையல்ல. வாலு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தமிழ் நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். அப்போதும் கூட சிம்புவும் ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், சிறிது நாட்களுக்குள்ளாகவே அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த திருமணப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட, அரசியல்வாதி மகன் ஒருவரை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscars 2025: உச்சகட்ட எதிர்பார்ப்பு..! ஆஸ்கர் விருது விழா- எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? இந்தியருக்கு வாய்ப்பு?

Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”

Poonamallee - Marina Metro: பூந்தமல்லி டூ மெரினா பீச்..! நோ ட்ராஃபிக், இனி மேலேயே பறக்கலாம் - தயார் நிலையில் மெட்ரோ சேவை

Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?

ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscars 2025: உச்சகட்ட எதிர்பார்ப்பு..! ஆஸ்கர் விருது விழா- எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? இந்தியருக்கு வாய்ப்பு?
Oscars 2025: உச்சகட்ட எதிர்பார்ப்பு..! ஆஸ்கர் விருது விழா- எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? இந்தியருக்கு வாய்ப்பு?
Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Poonamallee - Marina Metro: பூந்தமல்லி டூ மெரினா பீச்..! நோ ட்ராஃபிக், இனி மேலேயே பறக்கலாம் - தயார் நிலையில் மெட்ரோ சேவை
Poonamallee - Marina Metro: பூந்தமல்லி டூ மெரினா பீச்..! நோ ட்ராஃபிக், இனி மேலேயே பறக்கலாம் - தயார் நிலையில் மெட்ரோ சேவை
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?

Fact Check: கிழிந்த காது..! தேங்காய் எண்ணெய் & பேண்டேஜ் குணப்படுத்தி விடுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?

Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?

Embed widget