மேலும் அறிய

Grammys 2022: கிராமி விருது: இந்தியாவில் எங்கு? எப்போது? - முழு விபரம் உள்ளே!

கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும்.

கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். இவ்விருதானது 1951 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது.

இந்த ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டுக்கான கிராமி விருது ஏப்ரல் முதல் வாரத்தின் இறுதியில் நடைபெறுகிறது. இசைத் துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர்களுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுப் பத்திரத்துடன் பளபளக்கும் கிராமாஃபோன் ஒன்றும் விருதாக வழங்கப்படும்

இந்த விருதின் எப்போதுமே எதிர்பார்ப்பு சற்று அதிகம்தான். இந்த ஆண்டு இந்த விருதுக்கு பல பெரும்புள்ளிகள் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜஸ்டின் பீபர், டோஜா கேட், H.E.R ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஜான் பேட்டிஸ்ட் தான் இந்த ஆண்டு அதிகமான பரிந்துரைகளைப் பெற்ற இசைக்கலைஞராக இருக்கிறார். இவர் மொத்தம் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

கிராமி விருது நிகழ்ச்சியை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

நடைபெறவுள்ள 64வது கிராமி விருதை இந்தியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்குப் பார்க்கலாம். இந்நிகழ்ச்சி  MGM Grand Garden Arenaவில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் தான் இந்த அரங்கம் உள்ளது. இந்த விருது நிகழ்ச்சியானது இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
 
கிராமி விருது நிகழ்ச்சியினை எங்கு பார்ப்பது.. முக்கியமாக இந்தியாவில்!

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் சோனி லிவ் ஆப், ஒளிபரப்புகிறது. ஏப்ரல் 4 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு Sony Liv app வாயிலாக ரசிகர்கள் பார்க்கலாம்.

கிராமி விருது 2022: நிகழ்ச்சி நிரல் என்ன?

இந்த ஆண்டு கிராமி விருது மேடையில் கே பாப் பேண்ட் பிடிஎஸ் (K-pop band BTS ) நேரடியாக நிகழ்ச்சி நடந்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசைக்குழுவானது இதுவரை கிராமி விருதைப் பெற்றதில்லை. இந்த ஆண்டு  "Butter" என்ற சிங்கிள் நம்பருக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவைத் தவிர Eilish, Gaga, Brandi Carlile, Bieber ஆகியோரும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். Paak இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சில்க் சோனிக் Silk Sonic என்ற இரட்டையர் அணி ப்ரூனோ மார்ஸ், ஆண்டர்சன் நிகழ்ச்சி நடத்தவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை சிபிஎஸ் தொலைக்காட்சி பேராமவுன்ட்+ ஸ்ட்ரீமிங் நிறுவனத்துடன் இணைந்து செய்யவுள்ளது. நகைச்சுவை நடிகர் ட்ரெவார் நோவா 64வது கிராமி விருது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

Grammys 2022: கிராமி விருது: இந்தியாவில் எங்கு? எப்போது? - முழு விபரம் உள்ளே!

கொரோனாவால் தள்ளிப்போன நிகழ்ச்சி..

64 வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரியிலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால் தேதி மாற்றப்பட்டது. வழக்கமாக லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் நிகழ்ச்சியானது தேதி மாற்றத்தின் காரணமாக லாஸ் வெகாஸுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் வெகுக் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கிராமி விருதுகளுக்கான தேர்வுக் காலம் செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021 என்று நிர்ணயிக்கப்பட்டது. 

ரஹ்மானுக்கு கிடைத்த அங்கீகாரம்..

இந்தியாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு கிராமி விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காகவும், அந்தப் படத்தில் ரஹ்மானின் சிறந்த இசைக்காகவும் இந்த இரு விருதுகளும் கிடைத்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget