Ghoomer Twitter Review : வழக்கமான கதையில் வித்தியாசமான முயற்சி.. பாராட்டுக்களை அள்ளும் அபிஷேக் பச்சனின் கூமர்..
அபிஷேக் பச்சன் நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் வெளிவந்திருக்கும் கூமர் திரைப்படம் ட்விட்டரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது
அபிஷேக் பச்சன் நடித்து ஆர். பால்கி இயக்கியிருக்கும் கூமர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் ட்விட்டரில் என்ன மாதிரியான விமர்சனங்களை தெரிவித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
சீனே கம், பா, ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பால்கி தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் கூமர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஷபானா ஆஸ்மி, அபிஷேக் பச்சன், சயாமி கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தனது ஒரு கையை இழந்த நிலையில் தனது முயற்சியால் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஒருவரின் கதையை படமாக இயக்கியிருக்கிறார் பால்கி.
கூமர்
கிரிக்கெட்டை மையப்படுத்தியக் கதை கூமர். ஆனால் வழக்கமான கிரிக்கெட் கதை அல்ல இது. ஒரு விபத்தில் தனது ஒரு கையை இழக்கும் பந்து வீச்சாளர் ஒருவர் தனது ஒரு கையால் கிரிக்கெட் விளையாட்டில் பங்குபெறும் கதை. தனது வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்த ஒருவராக அபிஷேக் பச்சன் இந்தப் படத்தில் தோற்றமளிக்கிறார். தான் பார்க்காத வெற்றியை இந்தப் பெண்ணின் மூலம் பார்க்க ஆசைப்பட்டு அவருக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த விளையாட்டில் தனது ஒரு கையுடன் அந்தப் பெண் கிரிக்கெட்டிலும் அபிஷேக் பச்சன் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றாரா என்பதே இந்தப் படத்தின் கதை.
தந்தை அபிஷேக் பச்சன் பாராட்டு
T 4741 - Abhishek I can say this as a Father, yes, but also as a member of the fraternity we both belong to ..
— Amitabh Bachchan (@SrBachchan) August 17, 2023
At this young age and in the time period, you have performed in the most complex characters in film after film .. all different convincing and all successful .. ❤️
கூமர் படத்திற்கு முதல் ரசிகர் என்றால் நடிகர் அபிஷேக் பச்சனின் தந்தையான அமிதாப் பச்சன்தான். இன்று படத்தைப் பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சன் இவ்வளவு சின்ன வயதில், தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் பல்வேறு சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறப்பான சம்பவம்
கூமர் திரைப்படம் சிறப்பான ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக வந்திருப்பதாகவும் இயக்குநர் பால்கி வழக்கமான ஒரு கதைக்களத்தில் புதிதான ஒரு முயற்சியை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரசிகர்கள்.
The verdict is out .. #Ghoomer is an incredible film. Fabulous reviews coming in from every direction. My dearest brother @juniorbachchan am so so proud of you!! Your act I believe is pure gold and the word is that you have hit it out of the park with your brilliance !!!… pic.twitter.com/eImD6azeWn
— Riteish Deshmukh (@Riteishd) August 18, 2023
#OneWordReview...#Ghoomer: INSPIRING.
— taran adarsh (@taran_adarsh) August 18, 2023
Rating: ⭐️⭐️⭐️½#Ghoomer is a compelling sports-drama that hits the boundary… #RBalki thinks out of the box, #Ghoomer also takes you on a journey that’s heartwarming and inspiring. #GhoomerReview#AbhishekBachchan stands tall, delivers a… pic.twitter.com/hRvZk7GwJ2