Jon snow Sequel : மீண்டும் வருகிறார் ’King of North’ ஜான் ஸ்நோ... கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்..
தொடரின் முக்கியக் கதாபாத்திரங்களுள் ஒன்றான 'ஜான் ஸ்நோ’ பாத்திரத்தை மையமாக வைத்து புது தொடர் ஒன்றுக்கான பணிகளை தொடங்கியுள்ளதாக எழுத்தாளர் ஜார்ஜ்.ஆர்.ஆர்.மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் எட்டு ஆண்டுகள் ஒளிபரப்பாகி, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.
ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டின் எழுதிய ’எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.
இத்தொடர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இத்தொடரின் வெறித்தனமான ரசிகர்கள் இன்று வரை தொடரை ரீவாட்ச் செய்து நினைவுகூர்ந்து வருகின்றனர்.
ஜான் ஸ்நோ பற்றி தொடர்
குறிப்பாக தொடரின் வலுவான கதாபாத்திரங்கான டிரியன் லேனிஸ்டர், செர்ஸி, டெனைரிஸ் டார்கேரியன், ஜான் ஸ்நோ என பல கதாபாத்திரங்களுக்கும், அக்கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கும் தனித்தனியாக ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில், தொடரின் முக்கியக் கதாபாத்திரங்களுள் ஒன்றான ஜான் ஸ்நோ பாத்திரத்தை மையமாக வைத்து புது தொடர் ஒன்றுக்கான பணிகளை தாங்கள் தொடங்கியுள்ளதாக எழுத்தாளர் ஜார்ஜ்.ஆர்.ஆர்.மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
ஜான் ஸ்நோவாக இத்தொடரில் நடித்த கிட் ஹாரிங்டன்னின் முயற்சியால் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கிட் ஹாரிங்டன் தன் சொந்தக் குழுவினரை இதற்காக தேர்ந்தெடுத்து தன்னிடம் கூட்டி வந்ததாகவும், முழு வீச்சில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஜார்ஜ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இணைய தொடராக வெளிவருமா?
’ஸ்நோ’ என இத்தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இது இணைய தொடராக வெளிவருமா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் இத்தொடரில் டெனைரிஸ் டார்கேரியனாக நடித்துள்ளா எமிலியா கிளார்க்கும் புது தொடர் குறித்து பதிவிட்டுள்ளதால் ஏக்கத்தில் காத்திருக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மிவிருதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒளிபரப்பான 8 ஆண்டுகளும் வாரிக் குவித்தது.
மேலும் இத்தொடரின் கடைசி சீசனும் குறிப்பாக தொடரின் முடிவும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ஆன்லைனில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெட்டிசன் போட்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்