மேலும் அறிய

Vetri Maaran's Viduthalai | வெற்றிமாறனுடன் கைகோக்கும் பிரபல இயக்குநர்.. ரசிகர்கள் உற்சாகம்!

வெற்றிமாறன், கவுதம் மேனன் கைகோத்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் கவுதம் மேனன் காவல் அதிகாரி கெட்டப்பில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன், கவுதம் மேனன் கைகோர்த்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் கவுதம் மேனன் காவல் அதிகாரி கெட்டப்பில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன். இருவரும் இரு பெரிய என்டிட்டி. எல்லாவற்றை அப்படியே ராவாக கொடுத்து அதை திகைப்பாக இருந்தாலும் திகட்டாமல் சாதிப்பவர் வெற்றிமாறன். சில நேரங்களில் எலீட்டிஸ்ட் அப்ரோச் எட்டிப்பார்த்தாலும் கூட எலிகன்ஸ், கிரேஸ் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் கவுதம் மேனன். தனுஷை வெற்றிமாறன் கையாண்டதையும், கவுதம் மேனன் கையாண்டதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இருவரும் தரமும், நிறமும், திறமையும் பளிச்சிடும்.

வெற்றி ஃபார்முலா இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி இயக்கத்தில் விடுதலை என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தான் இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பாவக்கதைகள் அந்தாலஜியிலும் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கியிருப்பார். அதில் கவுதம் மேனனும் ஒரு கதையை இயக்கியிருப்பார். 

Vetri Maaran's Viduthalai | வெற்றிமாறனுடன் கைகோக்கும் பிரபல இயக்குநர்..  ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது இருவரும் கைகோத்துள்ள செய்தியால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பெரும்பாலான படப்பிடிப்பும் முடிந்துவிட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் கவுதம் தனது ட்ரேட்மார்க்கான போலீஸ் வேடத்தில் தான் இந்தப் படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுதம் மேனனுன் காப் கெட்டப்களும்..

இயக்குநர் கவுதம் மேனனின் தீவிர ரசிகர்களிடம் கேட்டால் அவருடைய படங்களில் வரும் மிடுக்கான துடிப்பான காவல் அதிகாரிகளில் கவுதமை பார்க்க முடியும் என்பார்கள். காக்ககாக்க சூர்யாவாக இருக்கட்டும், இல்லை வேட்டையாடு விளையாடு ராகவனாக இருக்கட்டும் சூர்யாவையும், கமலையும் தாண்டி உடல்மொழியிலும், ஆங்கில உச்சரிப்பிலும் கவுதம் மேனன் அழகாகத் தெரிவார். என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் சிறு சிறு அசைவுகளிலும் கவுதம் மேனனைப் பார்க்க முடிந்திருக்கும். 

தேசிங் பெரியசாமி படத்தில் வரும் கவுதம் மேனன் காவல் அதிகாரி கெட்டப்பில் மாஸ் காட்டியிருப்பார். படத்தைப் பார்த்துவிட்டு அசந்து போனதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது வேறு கதை.

அந்தப் படம் முழுவதும் கவுதம் மேனனின் ஒவ்வொரு நகர்வும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைக்கும். செம்ம மாஸ் காட்டுகிறாரே என நினைக்கும்போது க்ளைமாக்ஸில் தான் காப் கவுதம் மேனனின் நிஜ முகம் வெளியாகும். இதுதான் படத்திற்கு மிகப்பெரிய ப்ள்ஸும் கூட. 

காவல் அதிகாரியாக மட்டுமல்ல ஓடிடி தளத்திலும் கவுதம் மேனன் பல்வேறு கதாபாத்திரங்களிலும் தனது திறமையைப் பளிச்சிட செய்துவிட்டார்.

ஆகையால், வெற்றிமாறன், கவுதம் மேனன் இணையும் விடுதலை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget