மேலும் அறிய

Vaaranam Aayiram: சூர்யா - கௌதம் மேனனின் க்ளாசிக் ஹிட்.. 15 ஆண்டுகளைக் கடந்த வாரணம் ஆயிரம்.. சில சுவாரஸ்யத் தகவல்கள்!

தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நடிகரால்  நடிக்கப்பட்டது என்கிற உணர்வு சுத்தமாக ஏற்படாததே இப்படத்தின் பெரும் வெற்றி.

வாரணம் ஆயிரம்

கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம் . சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துள்ளன.


Vaaranam Aayiram: சூர்யா - கௌதம் மேனனின் க்ளாசிக் ஹிட்.. 15 ஆண்டுகளைக் கடந்த வாரணம் ஆயிரம்.. சில சுவாரஸ்யத் தகவல்கள்!

தன்னுடைய தந்தையின் இறப்பைத் தொடர்ந்து தன்னுடைய  கடந்த காலத்தை ஒரு மனிதன் நினைவுகூறுவதே வாரணம் ஆயிரம் படத்தின் கதை. நம் வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களை இழப்பது. ஒரு கட்டத்திற்கு மேல் நாம் அதை கடந்து வந்து மீண்டும் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்குவதை, சூர்யாவின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களாக காட்டியிருப்பார் இயக்குநர் கெளதம் மேனன்.


Vaaranam Aayiram: சூர்யா - கௌதம் மேனனின் க்ளாசிக் ஹிட்.. 15 ஆண்டுகளைக் கடந்த வாரணம் ஆயிரம்.. சில சுவாரஸ்யத் தகவல்கள்!

சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நடிகரால்  நடிக்கப்பட்டது என்கிற உணர்வு சுத்தமாக ஏற்படாததே இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி.

கூடுதலாக இந்தப் படத்தில் சூர்யாவின் ஃபிட்னஸைப் பார்த்து ரசிகர்களும் ஜிம்களுக்கு செல்லும் அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இடைவேளை வரை மட்டுமே வரும் சமீரா ரெட்டி ரசிகர்களின் கனவுக் கன்னியாகிப் போனார். இப்படியாக ஒவ்வொருவரும் தனக்கேற்ற வகையில் இந்தப் படத்தை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கி சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்கிற டைட்டிலில் வெளியாகி வாரணம் ஆயிரம் தமிழ் அளவிற்கு தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  சமீபத்தில் தெலுங்குவில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகி  பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாகியது. 

சுவாரஸ்யத் தகவல்கள்


Vaaranam Aayiram: சூர்யா - கௌதம் மேனனின் க்ளாசிக் ஹிட்.. 15 ஆண்டுகளைக் கடந்த வாரணம் ஆயிரம்.. சில சுவாரஸ்யத் தகவல்கள்!

வாரணம் ஆயிரம் படத்தின் ஒரு சில காட்சிகள் ஆஃப்கானிஸ்தானில் படம் பிடிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ் படம் வாரணம் ஆயிரம். கெளதம் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான காக்க காக்க படத்தைத் தொடர்ந்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்கிற படத்தை தொடங்க இருந்தனர்.

இந்தப் படத்தில் அசின், த்ரிஷா என கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாரணம் ஆயிரம் படம் உருவாகியது. முதலில் இந்தப் படத்திற்கு  ‘நான் தான்’ அல்லது ‘உடல் பொருள் ஆவி’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டது.  

ஒரு ஃப்ளைட்டில் இருக்கும்போது தன்னுடைய தந்தை இறந்த செய்தி கெளதம் மேனனுக்கு வந்ததை மையமாக வைத்து இந்தப் படத்தை எழுதத் தொடங்கி இருக்கிறார் கெளதம் மேனன்.

மேக்னாவாக நடித்து ரசிகர்களை அழவைத்த சமீரா ரெட்டியின் கதாபாத்திரத்தில் முதலில் தீபிகா படுகோனை நடிக்கவைக்கத் திட்டமிட்டிருந்தார் கெளதம் மேனன்,  தீபிகா பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த ஆசை நிறைவேறாமல் போனது. அதே போல் சிம்ரனின் கதாபாத்திரத்தில் நடிகை தபூவை நடிக்க வைப்பதே இயக்குநரின் ஆசை. தபூ  நடிக்க மறுத்துவிட்டார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

வாரணம் ஆயிரம் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மொத்தம் எழு பாடல்களைக் கொண்ட சூப்பர்ஹிட் ஆல்பம் ஒன்றை இந்தப் படத்திற்கு வழங்கி இருக்கிறார். இளமை, காதல் , பிரிவு,  என எல்லாவிதமான உணர்வுகளுக்கும் ஏற்ற பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget