மேலும் அறிய

Dhruva Natchathiram: ‘இந்த தடவை ஸ்கெட்ச் மிஸ் ஆகாது’ - துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

கெளதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது

துருவ நட்சத்திரம்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ  நட்சத்திரம் . விக்ரம், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்து  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் நிதிப் பிரச்சனைகளால் தடைபட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இப்படத்தை பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட முயற்சி செய்து வருகிறார். 

சந்தித்த சவால்கள்

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தான் எதிர்கொண்ட சவால்களை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார் கெளதம் மேனன்.   “ஏற்கனவே பல வருடங்கள் கிடப்பில் இருந்ததால் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கூடுதலாக படத்தின் மீது கோர்ட்டில் வழக்கு இருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது.’

இதன் காரணத்தினால் நான் தனிப்பட்ட முறையில் தெலுங்கு மற்றும் கன்னட வெளியீட்டிற்காக பல தரப்பு விநியோகஸ்தர்களிடம் பேசி படத்தின் மீது இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்தி வருகிறேன்.  நீங்கள் நம்பாமல் கூட போகலாம், ஆனால் என்னுடைய படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டாலும் ஏதோ போன வாரம் படப்பிடிப்பு முடிந்தது போல் பார்க்க புதிதாக இருக்கிறது. அதனுடைய கதை எந்த வகையிலும் பழசாகிவிடவில்லை. இந்தப் படத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக திரையிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்

2.40 கோடி கொடுத்தால் மட்டுமே படம் ரிலீஸ்

ஆல் இன் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் மேனன் சிம்புவை வைத்து சூப்பர்ஸ்டார் என்கிற படத்தை எடுக்க இருந்தார். இந்தப் படத்திற்காக அட்வான்ஸ் தொகையாக 2.40 கோடி பெற்றுள்ளார். இந்தப் படம் முடிவடையாத நிலையில் இந்தப் பணத்தையும் அவர் திருப்பி தராததாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பணத்தை திருப்பி அளித்தால் மட்டுமே துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடைசி நேரத்தில் இந்த தொகையை திருப்பிக் கொடுக்க முடியாததால் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கெளதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

புதிய ரிலீஸ் தேதி

தற்போது ஆல் இன் பிக்ச்சர்ஸுக்கு தான் தரவேண்டிய தொகையை அடுத்த வாரத்திற்குள்ளாக கெளதம் மேனன் செலுத்திவிடுவதாக தெரிவித்துள்ளதாகவும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget