(Source: ECI/ABP News/ABP Majha)
Box Office Report : எல்லாருக்கும் டாப்பில் இருக்கும் கருடன்...கடந்த வாரம் வெளியான படங்களின் வசூல் நிலவரங்கள்
சூரியின் கருடன் மற்றும் கடந்த ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வெப்பன், அஞ்சாமை , ஹரா உள்ளிட்ட படங்களிம் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்
கடந்த ஜூன் 7 ஆம் தேதி தமிழில் வெப்பன், அஞ்சாமை , ஹரா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. வெப்பன் மற்றும் அஞ்சாமை ஆகிய இரு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் மோகனின் ஹரா படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. வசூலைப் பொறுத்தவரை இந்த மூன்று படங்களைக் காட்டிலும் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான சூரியின் கருடன் படம் டாப்பில் இருக்கிறது. இதில் எந்தெந்த படம் எவ்வளவு வசூல் ஈட்டியுள்ளது என்கிற தகவல்களைப் பார்க்கலாம்.
கருடன்
துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார் , மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கருடன். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படத்திற்கு பிற்கு சூரி நாயகனாக நடித்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கருடன் படம் மக்களிடம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. கருடன் திரைப்படம் முதல் வாரத்தில் உலகளவில் 30 கோடி வரை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வெப்பன்
நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி லீட் ரோலில் நடிக்க, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சூப்பர் ஹ்யூமன் கான்செப்டில் வித்தியாசமான படமாக உருவாகியுள்ள வெப்பன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வெப்பன் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட உள்ளன.
அஞ்சாமை
அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அஞ்சாமை”. சுப்புராமன் இயக்குநர்கள் லிங்குசாமி, மோகன் ராஜா ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அஞ்சாமை படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் தேர்வை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. அஞ்சாமை படத்தின் வசூல் குறித்த தகவல்கள் படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றன.
ஹரா
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 80களின் பிரபல நடிகர் மோகன் நடித்துள்ள படம் ஹரா. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் நடிப்பில் ஹரா படம் கடந்த ஜூன் 7ஆம் தேதி நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. ஹரா படம் முதல் நாளில் ரூ.50 லட்சம் வரை வசூலித்ததாக தகவல் வெளியானது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூலில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை என்பதே ஹரா படத்தின் வசூல் நிலவரம்