தினமும் வாக்குவாதம்...தப்பு பண்ணிட்டேன்...ஷங்கரின் கேம் சேஞ்சர் தயாரிப்பாளர் ஓப்பன் டாக்
Dil Raju : ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ஓப்பனாக பேசியுள்ளார்

டபுள் ப்ளாப் கொடுத்த ஷங்கர்
இந்திய சினிமாவின் தனிப்பெரும் அடையாளமாக இருந்தவர் ஷங்கர். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இரு படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்லை முன்னிட்டு வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் படமும் படுதோல்வி அடைந்தது. இரண்டு படங்களும் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான படங்கள் என்பதால் இப்படத்தின் தோல்வி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
கேம் சேஞ்சர் படம் குறித்து தில் ராஜூ
கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி குறித்து அப்படத்தில் பணியாற்றியவர்கள் தனித்தனியாக பல இடங்களில் பேசி வருகிறார்கள். இதில் பலர் இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவத்தை விமர்சிக்கும் விதமாக பேசியிருந்தார்கள். முன்னதாக கேம் சேஞ்சர் பட பாடல்கள் ஹிட் ஆகாதது குறித்து இசையமைப்பாளர் தமன் ஷங்கரை குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து படத்தின் படத்தொகுப்பாளர் ஷமீர் முகமத் படம் பற்றிய தன் விமர்சனத்தைத் தெரிவித்தார். கேம் சேஞ்சர் படத்தை நான் எடிட் செய்யத் தொடங்கியபோது மொத்தம் 7.5 மணி நேரத்திற்கு காட்சிகள் இருந்தன. அதை எல்லாம் சுருக்கி 3 மணி நேரத்திற்கு படத்தை எடிட் செய்ததாகவும் ஷங்கருடன் பணியாற்றியது ஒரு மோசமான அனுபவமாக இருந்ததாக அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியுள்ளார்.
" பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றும் போது தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இருக்கிறது. பெரிய இயக்குநர் என்றால் நிச்சயமாக பல விஷயங்களில் தலையிடுவார்கள். தினமும் ஏதாவது ஒரு வாக்குவாதம் ஏற்படும். இதனால் படம் சரியாக வரவில்லை என்றால் அது தயாரிப்பாளரின் தவறுதான். படத்தில் இருக்கும் தவறுகளை சரிசெய்ய முடியவில்லை என்றால் ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன். அதை ஏற்றுக்கொண்டு இனிமேல் இந்த மாதிரியான தவறை செய்யாமல் இருக்க வேண்டு . நான் இதுவரை தயாரித்த 60 படங்களில் ஒருத்தரும் பெரிய இயக்குநர் கிடையாது . அதுதான் நான் செய்த முதல் தவறு. குறைந்த பட்சம் பெரிய இயக்குநரோடு பணியாற்றும் போது நான் ஒரு ஒப்பந்தம் தயார் செய்து என்னுடைய கண்டிஷன்ஸை தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். அதை செய்யாதது தான் என்னுடைய முதல் தவறு." என தில் ராஜூ பேசியுள்ளார்





















