350 பேருக்கு சம்பள பாக்கி...இயக்குநர் ஷங்கர் மீது காவல்துறையில் புகார்
கேம் சேஞ்சர் படத்தில் பணியாற்றிய 350 பேருக்கு சம்பளம் பாக்கி தராததால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது

கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படமும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. மேலும் படம் வெளியான ஒரே நாளில் இணையத்தில் முழுப்படமும் கசிந்தது , பொய்யான பாக்ஸ் ஆபிஸ் தகவலை வெளியிட்டது என ஏகப்பட்ட சிக்கலில் மாடிக் கொண்டது கேம் சேஞ்சர். அந்த வகையில் தற்போது புதிய சிக்கல் ஒன்றில் சிக்கியுள்ளது கேம் சேஞ்சர்
சப்மள பாக்கி தராததால் புகார்
கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களுக்கு மட்டுமே சுமார் 70 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஒவ்வொரு பாடலுக்கு நூற்றுக் கணக்கில் ஜூனியர் ஆர்டிஸ்ட் பயண்படுத்தப்பட்டார்கள். கேம் சேஞ்சர் படத்தில் பணியாற்றிய சுமார் 350 ஜூனியர் ஆர்டிஸ்களுக்கு தலா 1200 ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாகவும் இந்த பணத்தை படக்குழுவினர் தராததால் ஆந்திரா குண்டூரில் காவல் துறையில் புகாரளித்துள்ளார்கள். படத்தின் இயக்குநர் ஷங்கர் , தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் துணை இயக்குநர் ஸ்வர்கம் சிவா ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அடுத்தடுத்த சிக்கலி ஷங்கர்
முதலில் இந்தியன் 2 , தற்போது கேம் சேஞ்சர் என அடுத்தடுத்த தோல்வியை சந்தித்துள்ளார் ஷங்கர். மேலும் எந்திரன் பட கதை விவகாரத்தில் அமலாக்கத் துறை ஷங்கரின் 10 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. தற்போது 1200 ரூபாய் சம்பளம் கொடுக்காததால் ஷங்கர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கி வருகிறார் ஷங்கர். அடுத்து வெளியாக இருக்கும் இந்தியன் 3 படம் தொடர்பாகவும் ஷங்கருக்கு லைகா நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் வெளியானதைத் தொடர்ந்து வரலாற்று கதையான வேள்பாரி நாவலை படமாக இயக்க இருக்கிறார் ஷங்கர். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வெயிட்டான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்




















